அதற்குள் நடக்கும் மர்மம் – கலோரி 2

அதற்குள் நடக்கும் மர்மம்

அதற்குள் நடக்கும் மர்மம். கலோரி என்றால் என்ன? ஒருவருக்கு எவ்வளவு கலோரி தேவை என்பதை சென்ற பாகத்தில் பார்த்தோம்.

தண்ணீருக்கும் கலோரிக்கும் என்ன சம்பந்தம்? தண்ணீர் குடிப்பதால் ஏன் உடலில் கழிவுகள் தேங்குகிறது? இரைப்பைக்குள் அப்படி என்ன மர்மம் நிகழ்கின்றது? என்பதைப் பற்றி இந்த பாகத்தில் பார்ப்போம்.

ஒரு ஆசிட் பாட்டிலை கொண்டு, கழிவறையை சுத்தம் செய்யலாம். தண்ணீர் கலக்காமல் ஆசிட்டை ஊற்றும்போது, அதிகப்படியான கறைகளை நீக்கும்.

அதே ஆசிட் பாட்டிலில் தண்ணீர் கலந்து பயன்படுத்தும்போது, ஆசிட்டின் வீரியம் குறைந்துவிடும். அழுக்கும் குறைந்த அளவே நீக்கப்பட்டு இருக்கும். இதே போன்று தான் நம் வயிற்றில் உள்ள அமிலமும் வேலை செய்யும்.

நம் இரைப்பையில், ஹைட்ரோ குளோரிக் அமிலம், பொட்டாசியம் குளோரைடு, சோடியம் குளோரைடு போன்றவை உள்ளது. ஹைட்ரோகுளோரிக் அமிலம், பெப்சின் மற்றும் ரெனின் சேர்ந்த கலவையாகும்.

இந்த வேதியல் பெயர்கள், கூடுதல் பொதுஅறிவு விஷயத்திற்காக கொடுத்துள்ளோம். இந்த இரைப்பை அமிலம் (Gastric acid), நாம் சாப்பிடும் உணவை செரிக்கவைக்கும் முக்கிய வேலையைச் செய்கிறது.

இரைப்பை அமிலங்களுக்கு, பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை கொல்லும் ஆற்றல் உள்ளது. குழந்தைகள் சாப்பிட்ட உணவு செரிக்காமல் வாந்தியெடுத்தால், வாந்தியெடுத்த தரைப்பகுதி அரிக்கப்பட்டு இருக்கும்.

அந்த அளவிற்கு வீரியம் கொண்ட அமிலங்கள், இரைப்பையில் சுரக்கப்படுகின்றன. இதனுடன் தண்ணீர் சேரும்போது, அதனுடைய வீரியம் குறைகின்றது. இதனால் உணவை செரிக்கவைக்கத் தாமதமாகின்றது.

இதனால் தான் சாப்பிடும் முன் அல்லது சாப்பிட்ட பின் அரைமணி நேரம் தண்ணீர் அருந்தக்கூடாது எனக்கூறுகின்றனர். ஒருவேளை தவிர்க்க முடியாத நேரத்தில் மிகவும் குறைந்த அளவு தண்ணீரை மட்டும் அருந்துவது நல்லது.

தண்ணீரை அதிக அளவு அருந்துவதால், இரைப்பையில் என்ன மாதிரியான மர்மங்கள் நிகழ்கின்றது என அடுத்த பாகத்தில் பார்ப்போம். மேலும் எந்த உணவிற்கு எவ்வளவு கலோரி எனப்பார்க்கலாம்.

கலோரி பாகம்-1 படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

தொப்பைக்காரனுக்கு தண்ணில கண்டம் – கலோரி 1