சோம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

சோம்பு

சோம்பு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

இந்தியர்களின் உணவில் சோம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். நம்முடைய மசாலா பட்டியலில் இது கண்டிப்பாக இடம்பெறும்.

நம்மில் பெரும்பாலோனோர் உணவிற்குப்பின் புத்துணர்ச்சிக்காகவும் செரிமானத்திற்காகவும் சோம்புவை சாப்பிடுவதுண்டு.

சோம்பின் நன்மைகள்

நாம் கோழிக்கறி, ஆட்டுக்கறி போன்ற திடமான உணவுகளை எடுத்துக்கொள்ளும் பொழுது செரிமானத்திற்காக சோம்புவை உணவிற்குப்பின் சாப்பிடுவது நல்லது.

வெயில்காலங்களில் நம்முடைய உணவில் அதிகமாக எடுத்துக்கொள்வதால் உடல் சூட்டை தணிக்கும் தன்மையும் கொண்டது.

வழக்கத்திற்கு மாறான வயிற்று வலி ஏற்படும் பொழுது சோம்புவை எடுத்துக்கொள்வது உடலுக்கு மிக நல்லது. இது சமயங்களில் வலி நிவாரணியாக செயல்படும் தன்மையும் கொண்டது.

நாம் தொடர்ச்சியாக சோம்புவை உணவில் எடுத்துக்கொண்டால் மூட்டு வலி தசை வலிகள் ஏற்படுதலை குறைக்கும் என ஆய்வு கூறுகிறது.

நீரிழிவு நோய் கொண்டோருக்கு சோம்புவை கொதிக்க வைத்து அறுந்தச்செய்தால் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கும்.

டீ, காபிக்கு பதிலாக சோம்பு டீ தினமும் எடுத்துக்கொள்வது உடலின் ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ள இயலும்.

குழந்தைப் பெற்ற பெண்களுக்குத் தாய் பால் சுரத்தலில் பிரச்சனை இருந்தால் சோம்புவை உண்பதால் பால் நன்றாக சுரக்கும்.

கண்கள் மங்களாகத் தெரிவது, தூரப் பார்வை, கிட்டப் பார்வை போன்ற பிரச்சனைகள் கொண்டோர் சோம்புவை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.