உங்கள் காதலை வெளிப்படுத்த ஒரு சில வழிமுறைகள்

உங்கள் காதலை

உங்கள் காதலை வெளிப்படுத்தும் ஒரு சில வழிமுறைகள்

காதலை வெளிப்படுத்துவது எவ்வளவு கடினம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதை வெளிப்படுத்த தெரியாமல் ஏகப்பட்ட காதல்கள் தோல்வியில் முடிகின்றன.

கேரி ஜாப்மன் (gary chapman) எழுதிய தி ஃபைவ் லவ் லாங்குவெஜேஸ் (The Five Love Languages) நாவலின் படி காதலை உங்கள் இணையிடம் வெளிப்படுத்தும் முறை:

நன்றி (Gratitude)

ஒவ்வொரு சிறு நிகழ்விலும் நன்றியை வெளிப்படுத்தும் பழக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள். நல்லதோ, கேட்டதோ நன்றி கூறுவதால் நாம் குறைந்து போவதில்லை. நன்றி கூறுவதால் இருவரிடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும்.

பரிசு அளியுங்கள்

எதிர்பாராத நேரங்களில் பரிசு அளித்து அசத்துங்கள். இதன் மூலம் நீங்கள் இருவரும் அளவு காணாத மகிழ்ச்சியை அடையலாம்.

உதவி அல்லது பணிவிடை

முடிந்தவரை சிறு சிறு உதவிகளை செய்ய முயலுங்கள். சமைத்துக் குடுப்பது அல்லது சமைக்க உதவுவது. பிற நிகழ்வுகளில் உதவி செய்வது போன்ற செயல்களில் ஈடுபட முயற்சி செய்யுங்கள்.

நேரத்தை செலவிடுவது

உங்கள் இணைக்கு அல்லது ஜோடிக்கு தேவையான அளவிற்கு நேரத்தை செலவிடுவது மிகவும் முக்கியம்.

உங்களுக்கு இருக்கும் நேரங்களிலும் உங்கள் காதலுக்கான நேரத்தை ஒதுக்கி உங்கள் ஜோடியுடன் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

நெருக்கம்

உங்கள் காதலியை அணைப்பது, கை கோர்ப்பது மற்றும் நெற்றியல் முத்தம் பரிமாறிக்கொள்வது போன்ற செயல்கள் மேலும் அவசியம்.

ஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான எண்ணங்களும் செயல்களும் கொண்டுள்ளோம். ஒருவர் மற்றொவரின் மொழியைப் புரிந்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.

கேரி ஜாப்மன் நாவலின் ஒரு சிறிய விளக்கம் மட்டுமே இது நீங்கள் முழுமையாக காதலை வெளிப்படுத்தும் முறையை அறிந்து கொள்ள நாவலை இணையத்தில் வாங்கிப் படியுங்கள்.