Home Latest News Tamil இயற்கை முறையில் மருக்களை அகற்றுவது எப்படி?

இயற்கை முறையில் மருக்களை அகற்றுவது எப்படி?

1046
0
இயற்கை முறையில்

இயற்கை முறையில் மருக்களை அகற்றுவது எப்படி

மனித உடலில் இருக்கும் மருக்களை அகற்ற முயன்று பல முறை தோல்வி அடைந்திருப்பீர்கள். நமது உடலில் இருக்கும் பப்பிலோமா வைரஸ் மூலமோ அல்லது நோய் எதிர்ப்புச்சக்தி குறைவாலோ மருக்கள் வரலாம். மருக்களை எளிய முறையில் அகற்றும் ஒரு சில வழிகளைப் பார்ப்போம்.

1. ஆப்பிள் சிடர் வினிகர்

அதிக அமிலங்களைக் கொண்ட இது எளிதாக மருக்களின் வளர்ச்சியை தடுத்துவிடும். காட்டன் துணியில் நன்கு நினைத்து மரு இருக்கும் இடத்தில் இரவு முழுவதும் கட்டி விடவும்.

இதைத் தொடர்ந்து 5 நாட்கள் செய்தால் ஆறாவது நாளில் எளிதாக மறுக்களை அகற்றி விடலாம்.

2. சோற்றுக் கற்றாழை

இதில் காணப்படும் மலிசிக் அமிலங்கள் அதிக நோய் எதிர்ப்பு தன்மை கொண்டவை. இவை எளிதில் மருக்களை அகற்றி உங்கள் தோலை சரி செய்து விடும். இதன் ஜெல்லை எடுத்து மருக்களில் தேய்த்தால் மட்டுமே போதுமானது.

3. சோடா உப்பு 

சோடா உப்பு மற்றும் ஆமணக்கு எண்ணையை கலந்து மருக்கள் இருக்கும் இடத்தில் தினமும் தடவினால் எளிதில் மருக்கள் மறைந்து விடும்.

4. வாழைப்பழத் தோல்

நீங்கள் வாழைப்பழம் விரும்பி உண்பீர்களா ? இனிமேல் தோலை கீழே போடவேண்டாம். உங்கள் உடலில் மருக்கள் இருந்தால் அதில் நன்கு தேய்க்கவும். வாழைப்பழத் தோலில் இருக்கும் நொதிகள் எளிதில் மருக்களை அகற்றி விடும்.

5. வெள்ளைப்பூண்டு

தோல்களில் ஏற்படும் நோய்களுக்கு பூண்டு ஒரு சிறந்த தீர்வாகும். இதில் காணப்படும் அல்லிசின் அனைத்து பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளை எளிதில் அகற்றும் தன்மை கொண்டவை.

பூண்டின் தோலை உரித்து மருக்களின் மேற்பகுதியில் தினமும் தேய்த்து வந்தால் எளிதில் மருக்கள் மறைந்து விடும்.

Previous articleசவர்க்காரா? சர்காரா? நேரு சிலைவடிவில் அரங்கேறியது – கர்மா 3
Next articleஅஜித்தின் 21 வயது மகள்; எப்படி சாத்தியம்?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here