இரட்டையர்கள்: ஐடெண்டிகள்-பிரடெர்னல் ட்வின்ஸ்

இரட்டையர்கள்

இரட்டையர்கள்: ஐடெண்டிகள்-பிரடெர்னல் ட்வின்ஸ் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன?

ஒரே பிரசவத்தில் இரண்டு குழந்தைகள் பிறந்தால் அவர்கள் இரட்டையர்கள் (Twins) எனப்படுவர். பார்ப்பதற்கு ஒரே முகத்தோற்றத்துடன் இருப்பார்கள்.

இவர்கள் ஒரே பாலினத்தையும் அல்லது வெவ்வேறு பாலினத்தையும் கொண்டிருக்கலாம். இரட்டைக்குழந்தைகள் பிறப்பதற்கு காரணம் அண்டவிடுப்பின் போது ஒரு கருமுட்டைக்கு பதிலாக இரண்டு கருமுட்டைகள் உருவாவதே.

பொதுவாக இது உணவுப் பழக்கத்தினால் ஏற்படலாம் அல்லது சிலர் இரட்டைக்குழந்தைகள் வேண்டும் என்றே சில மருந்துகளை எடுத்துக்கொள்கின்றனர்.

இரட்டையர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஐடெண்டிகள் அல்லது மோனோசைகாட்டிக் இரட்டையர்கள் மற்றொன்று பிரடெர்னல் அல்லது டைசைகாட்டிக்

ஐடெண்டிகள் அல்லது மோனோசைகாட்டிக் (Identical or Monozygotic)

மூன்றில் ஒரு இரட்டையர்கள் இந்த வகையாகும். இந்த வகையில் கருவுற்றபின் முட்டை தானாகவே இரண்டு முட்டையாகப் பிரிந்துவிடும். பிரிந்த இரண்டு கருமுட்டைகள் இரண்டு குழந்தையாக வளரும்.

இந்த இரண்டு குழந்தைகளும் ஒரே மரபுப் பண்பு (DNA) மற்றும் ஒரே வகைப் பாலினத்தை மட்டுமே கொண்டிருப்பார்கள்.

ஐடெண்டிகள் இரட்டையர்கள் ஒருவர் மற்றொருவரின் கண்ணாடிப் படம் போல் இருப்பார்கள். அதாவது ஒருவரின் வலது பக்க முகமும், மற்றொருவரின் இடது பக்க முகமும் பார்க்க ஒரே மாதிரியாக இருக்கும்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு கருமுட்டையில் ஒரு விந்தணுவால் கருவுற்று இரண்டு குழந்தைகளாக பிரிவதே ஐடெண்டிகள் அல்லது மோனோசைகாட்டிக் இரட்டையர்கள் ஆவார்கள்.

பிரடெர்னல் அல்லது டைசைகாட்டிக் (Fraternal or Dizygotic)

மூன்றில் இரண்டு மடங்கு பிரடெர்னல் இரட்டையர்களாக இருப்பார்கள். இரண்டு கருமுட்டையில் இரண்டு விந்தணுக்களால் கருவுற்று இரண்டு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கும்.

ஒரே பாலினம் அல்லது வெவ்வேறு பாலினத்தைக் கொண்டிருக்கலாம். இவர்கள் வெவ்வேறு மரபணுப் பண்பை கொண்டிருப்பார்கள். முகத்தில் ஓரளவு ஒரே தோற்றத்துடன் காணப்படுவார்கள்.

மூன்றாம் வகை 

சில ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவதாக ஒரு இரட்டையர் வகை இருக்கலாம் என நம்புகின்றனர். ஆனால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தவகையில் கருமுட்டை கருத்தரிக்கும் முன்பே இரண்டாகப் பிரிந்து, இரண்டு விந்தணுக்களால் கருவுறும்.

இந்த வகையில் பிறப்பவர்கள்  பிரடெர்னல் இரட்டையர்கள், ஐடெண்டிகள் இரட்டையர்கள் போன்ற தோற்றத்தைப் பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் இதை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இரட்டையர்களை அடையாளம் காண்பது எப்படி?

பிறந்த குழந்தை எந்த வகை இரட்டையர் என்பதையும் அவ்வளவு எளிதில் கண்டறிய முடியாது.

கருவுற்ற பின் ஏன் கருமுட்டை இரண்டாகப் பிரிகின்றது என்பதையும் இதுவரை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை.

மேலும் எந்தவகை இரட்டையர்கள் என்பதைக் கண்டறிய டி.என்.ஏ சோதனையே உதவுகிறது.

ஒரே மாதிரி டி.என்.ஏ, கொண்டால் ஐடெண்டிக்கள் எனவும், வேறு வேறு டி.என்.ஏ. இருந்தால் பிரடெர்னல் எனவும் வகைப்படுத்தப் படுகின்றனர்.

ஐடெண்டிகள் டிவின்ஸ்யை கைரேகை கொண்டே தனித்தனியாக அடையாளம் காண முடியும். மற்றபடி ஒருவர் இன்னொருவரின் ஜெராக்ஸ் போன்றே இருப்பார்கள்.