திரைவிமர்சனம் – இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் #IRIR

திரைவிமர்சனம்

திரைவிமர்சனம்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் #IRIR

என் காதல் ரொம்ப மெச்சூர் லவ் எனப் பலரும் சொல்லுவார்கள். காதலி பிரிந்து செல்லும் போதுதான் அவர்கள் எந்த அளவு மெச்சூர் எனத் தெரியும்.

அப்படி ஒரு விசயத்தை இப்படம் சொல்லுகிறது. கொஞ்சம் ராவாக எடுத்து உள்ளனர். ஒரு காதலை ஒரு ஆண் எப்படி புரிந்துள்ளான், பெண் எப்படி புரிந்துள்ளாள் என்பதை மிகவும் டீட்டைலாக கொடுத்துள்ளார் இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி.

சில்பா மஞ்சு புதுமுக நடிகை. பொதுவாக புது நடிகைகளை மனதிற்குள் பதிய வைக்க மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும்.

இந்தப் படத்தில் இந்த நடிகையின் உதட்டு மேல் உள்ள மச்சம் மட்டுமே மனதில் உள்ளது. ஒவ்வொரு காட்சியிலும் வெவ்வேறு முகச் சாயலில் தோன்றுகிறார்.

இந்த மூச்சிலாம் ஹீரோயினா? என நாம் சலித்துக்கொள்ளும்போது அடுத்த காட்சியில் வேறு ஒரு ஹேர்ஸ்டைல், வேறுவித மேக்கப். இதல்லவோ ஹீரோயின் எனவும் நினைக்கவைக்கிறார்.

இதுபோன்ற கதைகள் பழசு என்றாலும், எடுத்துள்ள விதம் புதிது. இனிவரும் நாட்களில் இதுபோன்ற மேக்கிங் ஸ்டைல் தான் ட்ரெண்டாக மாறும்.

இருப்பினும் இதை அனைவரும் ரசிக்க முடியாது. இன்னும் நிறைய நாட்கள் உருண்டோட வேண்டும். இதுவே ஒரு மைனசாகிவிட்டது.

குறிப்பாக இந்தப் படம் காதலித்து சண்டையிட்டு பிரிந்து செல்பவர்களையே அதிகம் கவரும். மற்றவர்களுக்கு, என்ன இலவுடா இது…. இப்டி வந்து சிக்கிட்டமே! என்று சலிப்பு தட்டும்.

முதல் பாதி மிகவும் அருமை. காமெடி கலாட்டா, ஆக்சன், லவ், கில்மா என போன வேகமே தெரியவில்லை.

இரண்டாம் பாதியில் காதல், பிரிவு, சண்டை இப்படியே மாறி மாறிச் செல்கிறது. முதலில் லேசாக சலிப்பு தட்டியது.

பின்பு ஓகே சரியான காட்சிகள் தான். தேவையான காட்சிகள் தான் என மனது இயக்குனரின் கருத்தோடு ஒன்றுகிறது.

ஆனால் அதுவே கிளைமேக்ஸ் வரை தொடரும்போது செம்ம காண்டாகிறது. மேலும் கஞ்சா, காதல் என முடிகிறது.

ப்ரேமம் படத்தில் ஆரம்பித்து அர்ஜுன் ரெட்டி படம் வரை இதுவரை வந்த காதல் படங்களின் கோர்வையில் எடுத்துவைத்துள்ளனர்.

அந்த படங்களில் வரும் காட்சிகளை அப்படியே எடுத்துவிடக்கூடாது என மாற்றங்கள் செய்துள்ளனர். இருப்பினும் கிளைமேக்ஸ் அர்ஜுன் ரெட்டியை மட்டுமே மனதில் நிறுத்துகிறது.

இந்த படத்தின் பலவீனம் கிளைமேக்ஸ். கடைசி அரைமணி நேரத்தை வேறுவிதமாகக் கூறியிருந்தால் இதை ஒரு அருமையான படம் என்றே சொல்லலாம். ஆனால் அது முடியாமல் போய்விட்டது.

ஹரிஷ் கல்யாண் சிடுசிடு நடிப்பு அருமை. மற்ற ரியாக்சன்களில் மந்தமான நடிப்பு தான். மாகாபா ஹீரோவாக என்ட்ரி ஆகி தற்பொழுது சைட் ரோல், ஹெஸ்ட் ரோல் என நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

மொத்தத்தில் இப்படம் 2கே கிட்ஸ் பார்த்து ரசிக்கும் படம். அதுவும் காதலித்தால் மட்டுமே.