அபினிச்செடிகளை அழிக்கும் பச்சைக் கிளிகள்

அபினிச்செடிகளை அழிக்கும் பச்சைக் கிளிகள்

‘ஒரு புறம் மழை வரையறை இல்லாமல் பெய்கிறது, மற்றொரு புறம் பச்சைக்கிளிகள் எங்கள் பயிர்களை நாசம் செய்கிறது’ என்று அபினிச்செடி அல்லது கசகசாச்செடி உற்பத்தி செய்வோர் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.

மேலும் பறவைகளை விரட்ட அதிகமாக சத்தம் கேட்கும் கருவிகளை பொறுத்த வேண்டும், அல்லது வெடிச்சத்தத்தை ஏற்படுத்த வேண்டும். இதை செய்தாலும் கிளிகளை கட்டுப்படுத்த இயலவில்லை.

இதற்கான எந்த உதவியும் அரசாங்கம் செய்து தரவில்லை யாரிடம் நாங்கள் முறையிடுவது என்று மத்தியப்பிரதேச மாநில விவசாயிகள் வருத்தப்படுகிறனர்.

நாங்கள் அனைத்து பயிர்களையும் அறுவடை செய்த பின் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுப்பி விடுவோம். அதற்கான உரிமமும் எங்களிடம் உள்ளது.

அபினிச்செடிகளை ஒரு முறை கிளி சாப்பிடும் பொழுது இதற்கு அடிமையாகி விடுகிறது. இதனால் மீண்டும் மீண்டும் வர தொடங்கிவிடுகிறது என்று அபினிச்செடிகளின் வல்லுநர் டாக்டர் ஆர்‌எஸ் சுந்தவத் தெரிவித்துள்ளார்.

அபின் எனப்படும் போதைப்பொருள் அபினிச்செடிகளில் இருந்து எடுக்கப்படுகிறது. இந்த அபின் மருத்துவத்துறைகளில் வலிநீக்கியாகவும், மேலும் பல தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஓபியம் காயை கீறிவதால் வரும் திரவத்திலிருந்து அபின் தயாரிக்கப்படுகிறது. இதன் விதைகள் கசகசாவக பயன்படுத்தப்படுகிறது.

அபினியை உற்பத்தி செய்வதற்கு முழு அரசாங்க உரிமம் பெற்றிருக்க வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்தால் கடுமையான சிறை தண்டனை அளிக்கப்படும்.