Home சினிமா ஹாலிவுட் சினிமா கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) பற்றிய சுவாரசியமான தகவல்கள்

கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) பற்றிய சுவாரசியமான தகவல்கள்

365
0

கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game of Thrones) பற்றிய சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு எபிசோடின் செலவு மட்டும் சுமார் 60 லட்சம் அமெரிக்க டாலர்கள் செலவில் உலகிலேயே மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் ஒரு தொடராகும்.

2 கோடி பேரால் பார்க்கப்படும் சீரியல் ஒன்று இருக்கிறது தெரியுமா? HBO சேனலில் ஒளிப்பரப்பாகும் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்'(Game of thrones) என்னும் சீரியல் தான் உலகிலே அதிகப்பேரால் பார்க்கப்பட்டது என்ற சாதனையை நிகழ்த்தியிருக்கிறது.

முக்கிய கதாப் பாத்திரங்களான எமிலியா கிளார்க், லேனா ஹெயடி ஆகியோருக்கு எபிசோடுக்கு தலா 15கோடி முதல் 20கோடி வரை சம்பளம் வழங்கப் படுகிறதாம்.

இல்லீளாக அதிகம் டவுண்லோட் செய்யப்படும் ஒரே தொடராகவும் உள்ளது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் இதை பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

தொடரில் பயன்படுத்தப்பட்டுள்ள டொத்ராக்கி என்னும் மொழிக்காக பிரத்யேகமாக 3000 வார்த்தைகளை புதிதாய் உருவாக்கி இருக்கிறார்கள்.

அயர்லாந்தின் சில பகுதிகளை கூகிள் மேப்பில் பார்க்கும் பொழுது MODE OF TRANSPORT ட்ரேகன் என வெளியிட்டு இருக்கிறார்கள்.

66 வயதான ஜார்ஜ் ஆர்‌ஆர் மார்டின் கதையின் இறுதியை 5 வது சீஸன் முடிந்த பிறகே தயாரிப்பு நிறுவனத்திடம் கூறிவிட்டாராம்.

ஏனென்றால் ஒவ்வொரு சீஷனும் அவர் நாவலை எழுதி முடிக்க முடிக்க எடுக்கப்பட்டு வந்தது. தன்னுடைய உடல் நலன் கருதி தனக்கு எதேனும் ஆகிவிடலாம் என எண்ணி கதையின் முடிவை மட்டும் கூறி விட்டாராம்.

 

 

Previous articleஎன் வாழ்நாளில் நான் மிகவும் வருத்தப்பட்ட ஒரே நிகழ்வு இது தான்: தோனி உருக்கம்
Next articleஉங்கள் நண்பர் மறைமுகமாக காதலிப்பதாக உணர்கிறீர்களா?
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here