சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்: 18 வயது வந்தவருக்கு மட்டும்

சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்

சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்: 18 வயது வந்தவருக்கு மட்டும்

கணவன் மனைவி

கணவன் இல்லாத நேரத்தில் சமந்தா, முன்னாள் காதலனுடன் உடலுறவு வைத்து அவன் இறந்ததால் போலீஸிடம் சிக்கி அவதிப்படுகிறார்.

இந்தக் குற்றத்தில் இருந்து மனைவி சமந்தாவைக் காப்பாற்ற முயற்சிக்கும் அவளுடைய கணவன் பகாத் பாஸில்.

பருவ இளைஞர்கள்

செக்ஸை தவிர வேற எதுவும் தெரியாத பள்ளிப்படிப்பை முடிக்கவிருக்கும் நான்கு பருவ இளைஞர்கள் செக்ஸ் படம் பார்ப்பதற்காக சி‌டியை வாங்கி 3டியில் பார்க்கும் பொழுது நடந்த விபரீதம்.

ஆபாசப் பட நடிகை

நடிப்பது என் குறிக்கோள் என்னுடைய விருப்பத்தின்படி தான் நான் செக்ஸ் படத்தில் நடித்தேன். அதை என் கணவன் பார்த்தாலும் அல்லது மகன் பார்த்தாலும் எனக்கு கவலை இல்லை என்கிற ரம்யா கிருஷ்ணன்.

திருநங்கையாக மாறும் கணவன்

கல்யாணம் முடிந்து சில வருடங்களில் மனைவியை விட்டு ஓடி ஹார்மோன் காரணங்களால் திருநங்கையாக மாறிகிறார் விஜய்சேதுபதி.

10 வயது மகன் இருப்பது கூடத் தெரியாமல் சில ஆண்டுகள் கழித்து வீடு திரும்புவதால் விஜய்சேதுபதி படும் இன்னல்கள்.

காமப் போலீஸ்

காமத்தை தவிர வேறு எதுவும் இச்சை இல்லாத கொடூர குணத்தைக் கொண்ட போலீஸ் அதிகாரியாய் நடித்துள்ள பகவதி.

பக்தி முத்திய கணவன்

கடவுள் இருக்கிறாரா இல்லையா? எனத் தெரியாமல் கல்லை மட்டுமே பைத்தியமாய் வேண்டிக் கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணனின் கணவன் மிஷ்கின்.

மேற்கூறிய அனைத்துக் கதைகளையும் ஒன்றாக இணைத்து இறுதியில் ஒரு சமுதாய விழிப்புணர்வுடன் கதைக்களத்தை அமைத்து சிறந்த திரைக்கதையையும் வெளிப்படித்தியுள்ளார் இயக்குனர் தியாகராஜன்.

ஒரு கதாப்பாத்திரத்தை மட்டும் மையப்படுத்தாமல் அனைத்துக் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தது கதையை மேலும் தாங்கிப்பிடிக்கிறது.

அவருடைய ஆரண்ய காண்டம் திரைப்படத்தைப் போலவே வெவ்வேறு கதைகளை இறுதியில் ஒன்றிணைத்து எடுக்கப்பட ஒரு திரைப்படம் இதுவாகும்.

மிகவும் பிரபலமான ஹாலிவுட் இயக்குனர் குயிண்டன் டாரண்டியோவின் சூப்பர் ஹிட் திரைப்படமான பல்ப் பிக்சன் படக் கதை, திரைக்கதையைப் போலவே இதுவும் அமைக்கப்பட்டுள்ளது.

உடலுறவு என்ற ஒன்றையே ஏன் அனைவரும் விரும்புகின்றனர். பருவ வயது விடலை, சிறுவர்களில் இருந்து வயதானோர் வரை அனைவராலும் பேசப்படும் செக்ஸ் என்ற ஒன்று மட்டுமே வாழ்க்கை இல்லை.

நம் சமுதாயத்தில் இருக்கும் நன்மை தீமை, இது தான் நடைமுறை என்ற பெயரில் நாம் பிறரை குறிப்பாக திருநங்கைகளுக்கு செய்யும் பாவம் ஆகியவற்றை சுற்றிக்காட்டியுள்ள இயக்குனர் தியாகராஜன்.

படத்தின் பலவீனம்

10000 வருடங்களுக்கு முன்னர் மனிதன் உடை அணிந்திருந்தானா என்பது யாருக்கும் தெரியாது. இன்னும் 100 வருடங்களுக்கு பிறகு அணிந்திருப்பானா என்பதும் யாருக்கும் தெரியாது என ரம்யா கிருஷ்ணன் கூறும் வசனம்.

செக்ஸ் படத்தைப் பார்க்கும் யாரையும் இந்த உலகம் அசிங்கப்படுத்துவதில்லை ஆனால் அதில் நடிக்கும் எங்களை மட்டும் ஏன் அசிங்கமாகப் பேசுகிறீர்கள்? என படம் முழுவதும் அதிகமாக உடலுறவைப் பற்றிய வசனங்களும் காட்சிகளும் ஒரு வகையில் படத்திற்கு பலவீனத்தை ஏற்படுத்தி உள்ளது.

வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்துக் கூறும் ஒரு அருமையான திரைப்படம் சூப்பர் டீலக்ஸ் ஆகும்.

குறிப்பாக செக்ஸ் என்ற ஒன்றைப் பற்றி படத்தில் அதிகம் பேசப்பட்டுள்ளதால் 18 வயதிருக்கும் மேற்ப்பட்டோர் மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய படமாக உள்ளது.