சென்னை கொல்கத்தா இடையேயான ஐ‌பி‌எல் போட்டியில் அட்லீ-ஷாருக்கான் சந்திப்பு எதற்காக இருக்கும்?

சென்னை கொல்கத்தா இடையேயான ஐ‌பி‌எல் போட்டியில் அட்லீ-ஷாருக்கான் சந்திப்பு எதற்காக இருக்கும்?

சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடெர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. வழக்கம் போல இதுவும் குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டியாகும்.

இதில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் மற்றும் கோலிவுட் இயக்குனர் அட்லீயும் அருகருகே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தனர்.

இருவரும் அவ்வப்போது சீரியஸாக டிஸ்கஸ் செய்ததை பார்க்கும்போது விரைவில் ஒரு படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து நடிகர் ஆர்ஜே பாலாஜியும் தனது கிரிக்கெட் கமெண்ட்ரியில் குறிப்பிட்டிருந்தார்.

ஏற்கனவே ‘தளபதி 63’ படத்தில் ஷாருக்கான் நடிப்பதாக ஒரு வதந்தி கிளம்பி, பின்னர் அது படக்குழுவினர்களால் மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இவர்களின் இந்த சந்திப்பால் இருவரும் விரைவில் இருவரும் இணைந்து அடுத்த படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.