பிளாக் ஹோல் (Black Hole) கண்டுபிடிக்கப்பட்டு விட்டது! ஒரிஜினல் புகைப்படம்

பிளாக் ஹோல் (Black Hole)

பிளாக் ஹோல் (Black Hole) புகைப்படம் வெளியானது பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளுங்கள்.

பிளாக் ஹோலை தமிழில் கருந்துளை எனக் கூறலாம். பால்வெளி அண்டங்களுக்கு நடுவில் பிளாக் ஹோல் இருக்கிறதாக விஞ்ஞானிகளின் நீண்ட காலமாக தெரிவித்து வருகின்றனர்.

அதை அவர்கள் நிரூபித்தாலும் அதைப் புகைப்படம் எடுப்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருந்தது. கருந்துளை அதிகமான ஈர்ப்பு விசை கொண்டது. ஒளி கூட கருந்துளையிடம் இருந்து தப்ப இயலாது.

பிளாக் ஹோலைப் பற்றி அறிந்து கொள்ள கிரிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘இன்டர்ஸ்டெல்லார்’ திரைப்படத்தை பாருங்கள்.

நீண்ட நாட்கள் முயற்சியின் மூலம் தொழில்நுட்பத்தின் வசதியினால் அதனைப் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படத்தை NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டனர்.

EHT என அழைக்கப்படும் ஈவென்ட் ஹாரிஷன் டெலஸ்ஸ்கோப் திட்டத்தைச் சேர்ந்த NSF விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இதைச் சாதித்துள்ளனர்.

M87 என்ற கேலக்ஸியில் பூமியில் இருந்து சுமார் 5.2 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது இந்தக் கருந்துளைகள். பூமியில் இருக்கும் 8 தொலைநோக்கிகளைக் கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் ஹெயினோ ஃபால்ஸ்க் இதைப் பற்றி கூறியதாவது 

நாம் பார்க்கும் இந்த கருந்துளை சூரியனைவிட 6.5 பில்லியன் மடங்கு நிறை உடையது. பூமியில் இருந்து 40 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

பூமியை விட மூன்று மில்லியன் மடங்கு பெரியதாகும். நமது சூரிய குடும்பத்தைவிட மிகப்பெரிய ஒன்றாகும். இறுதியில் பல நாட்களின் முயற்சியால் பார்க்காத ஒன்றை பார்த்து விட்டோம் எனக் கூறினார்.