இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மோடியா?

இந்திய தேர்தல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மோடியா?

பிரதமர் மோடி தான் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் பெரிய பெரிய கருப்பு சூட்கேசில் பணம் கொண்டு செல்லப்படுவதாக சர்ச்சை வெடித்தது.

தமிழகத்தில் ஒரு ஓட்டுக்கு ஒரு நபருக்கு ஆளும் கூட்டணிக்கட்சிகள் சார்பில் 2000 ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நரேந்திர மோடி ஒடிஷா மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, தேர்தல் அதிகாரிகள் சிலர் ஹெலிகாப்டரை சோதனை செய்தனர்.

உடனே அவர்களை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்டு செய்வதாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதேவேளை ஓடிசாவின் முதல்வர் பட்நாயக்கின் ஹெலிகாப்டரில் பணம் கொண்டு செல்லப்படுவதாக சோதனை செய்யப்பட்டது.

அவர்களை தேர்தல் ஆணையம் பணியிடை நீக்கம் செய்யவில்லை. மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை செய்தவர்கள் மட்டும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைவராக நரேந்திர மோடி மறைமுகமாக செயல்படுகிறார் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இந்தியத் தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதற்கு இதுவே மிகப்பெரிய சான்று.