Home விளையாட்டு #MIvsRR மும்பை வீரரின் கையை உடைத்து த்ரில் வெற்றிபெற்ற ராஜஸ்தான்

#MIvsRR மும்பை வீரரின் கையை உடைத்து த்ரில் வெற்றிபெற்ற ராஜஸ்தான்

743
0
#MIvsRR

#MIvsRR இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.

முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 91 ரன்கள் எடுத்துள்ளது.

10.5-தாவது ஓவரில் 47 ரன்களில் ரோகித் சர்மா அவுட் ஆகினார். இதன் பிறகு மும்பையின் ரன்ரேட் குறைந்துவிட்டது.

டிகாக் 50 ரன்கள் ஹார்த்திக் பாண்ட்யா 28 ரன்கள் அதிக பட்சமாக அடித்தனர்.

200 ரன்களை கடக்கும் என எதிர்பார்த்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இதெல்லாம் எங்களுக்கு ஒரு ஸ்கோரே இல்லை என்கிற அளவிற்கு மும்பை பந்துவீச்சை மரண அடி அடித்தனர்.

ஜாஸ் பட்லர் 89 ரன்கள், ரஹானே 37 ரன்கள், சஞ்சு சாம்சன் 31 ரன்களும் அதிகபட்சமாக அடித்தனர்.

16 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே பறிகொடுத்தது. வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை இருந்தது.

17-வது ஓவரில் போட்டி முடிந்தாலும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு தான் ராயல்ஸ் அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

174 ரன்களில் 4 விக்கெட்டுகளை மளமளவென பறிகொடுத்தது. குருனால் பாண்டியாவும் பும்ராவும் மரண சொருகு சொருக ராஜஸ்தான் வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக்கட்டினார்.

கோபால் அடிக்க முயன்ற போரை அற்புதமாக அல்ஜார்ரி தடுத்தார். வேகமாக சென்று விழுந்ததில் அவரது தோள்பட்டை உள்காயத்துடன் எலும்பு முறிவு ஏற்பட்டுவிட்டது.

மொத்த விக்கெட்டுகளும் காலியாகி இருக்க வேண்டிய நிலை. பும்ரா ஓவரில் கடைசி பந்தில் கீப்பர் ஒரு கேட்ச் மிஸ் செய்துவிட்டார்.

ஹார்த்திக் பாண்ட்யா வீசிய கடைசி ஓவரில் கோபால் தூக்கிஅடிக்க அந்த கேட்ச்சும் மிஸ் ஆகிவிட்டது.

மும்பை வீரர்கள் தவறால் அதிஸ்ட காற்று மீண்டும் ராஜஸ்தான் பக்கம் அடிக்க அதே சூட்டோடு 19.3 வது ஓவரில் கோபால் ஒரு போர் அடித்து தோல்வியால் துவண்டுகொண்டு இருந்த ராயல்ஸை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

எளிமையாக வெற்றி பெறவேண்டிய போட்டியை கடைசி இரண்டு ஓவரில் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 188 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

அடுத்த போட்டியில் RCB vs KXIP மோதுகின்றது. வெற்றி கணக்கையே துவங்காத ராயல் சேலஞ்சர் பெங்களூரு அணி வெற்றி பெறுமா எனப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Previous article#MIvsRR ராஜஸ்தான் ராயல்ஸை கிழித்துதொங்கவிடும் மும்பை
Next articleகேம் ஆஃப் த்ரோன்ஸ் ரீவைண்ட்: சீஸன் 01
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here