Home சினிமா கோலிவுட் நடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்!

நடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்!

0

Chiranjeevi Sarja Died; நடிகை மேக்னா ராஜின் கணவர் சிரஞ்சீவி சார்ஜா திடீர் மரணம்! ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினரும், நடிகை மேக்னா ராஜின் கணவருமான சிரஞ்சீவி சார்ஜா இன்று மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.

நடிகை மேக்னா ராஜின் கணவர் திடீரென்று மாரடைப்பால் மரணமடைந்த செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த 1980 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி பிறந்தவர் தான் சிரஞ்சீவி சார்ஜா. இவர், ஆக்‌ஷன் கிங் அர்ஜூனின் உறவினர். 4 ஆண்டுகளாக அர்ஜூனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

சிரஞ்சீவி சார்ஜாவும், நடிகை மேக்னா ராஜூம் 10 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 2 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். மேக்னா ராஜ் தமிழில், காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

சிரஞ்சீவி சார்ஜா வாயுபுத்ரா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இதுவரை 19 க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள ராஜமார்தாண்டா படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றது.

மேலும், ஏப்ரல் உள்ளிட்ட சில படங்களின் படப்பிடிப்பும் கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று பிற்பகலில் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஜெயநகர் பகுதியிலுள்ள சாகர் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிரஞ்சீவி சார்ஜாவின் திடீர் மரணம், சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவுக்கு சினிமா நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version