Home சினிமா கோலிவுட் அட்லீ கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நிதியுதவி!

அட்லீ கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நிதியுதவி!

0
Atlee Corona Relief Fund

அட்லீ கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நிதியுதவி! கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவும் வகையில் இயக்குநர் அட்லீ ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.

கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார் இயக்குநர் அட்லீ.

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை 166 பேர் கொரோவால் பலியாகியுள்ளனர்.

கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு முடிவதற்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

அவர்களுக்கு உதவும் வகையில், ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்று பலரும் தங்களால் முடிந்த நிதியுதவியோ அல்லது அரிசி மூட்டைகளையோ வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று பிரபலங்கள் பலரும் நிதியுதவி மற்றும் அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளனர்.

இதுவரை ரூ.2 கோடியே 45 லட்சம் நிதியுதவி செய்துள்ளனர். 2 ஆயிரத்து 400 அரிசி மூட்டைகளும் கிடைத்துள்ளன என்று ஆர்.கே. செல்வணி விளக்கம் கொடுத்திருந்தார்.

ஆனால், இந்த தொகையை வைத்து இதுவரை 15 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவியுள்ளோம். மேலும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் அட்லீ கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். அதில், ரூ.5 லட்சம் இயக்குநர்கள் சங்கத்திற்கும், ரூ.5 லட்சம் ஃபெப்சி தொழிலாளர்களுக்கும் வழங்கியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version