Home சினிமா கோலிவுட் சிம்பு விருப்பப்பட்டால் நான் ரெடி: திரௌபதி இயக்குநர் மோகன் ஜி!

சிம்பு விருப்பப்பட்டால் நான் ரெடி: திரௌபதி இயக்குநர் மோகன் ஜி!

0
Simbu

Simbu; சிம்பு விருப்பப்பட்டால் நான் ரெடி: திரௌபதி இயக்குநர் மோகன் ஜி! திரௌபதி படத்தில் நடிக்கும் போதே நடிகர் ரிச்சர்டு இந்த படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும். அடுத்த படமும் நாம் சேர்ந்து பண்றோம் என்று என்னிடம் சொல்லிவிட்டார் என்று இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

திரௌபதி படம் ஹிட் கொடுக்கும். அடுத்த படமும் நாம் இருவரும் சேர்ந்து பண்றோம் என்று நடிகர் ரிச்சர்டு கூறியதாக திரௌபதி இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தனியார் சேனலுக்கு திரௌபதி இயக்குநர் மோகன் ஜி பேட்டியளித்தார். அப்போது, பேசிய அவர் கூறுகையில், திரௌபதி படம் நடிக்கும் போதே நடிகர் ரிச்சர்டு என்னிடம், இந்தப் படம் கண்டிப்பாக ஹிட் கொடுக்கும் என்று சொல்லிவிட்டார்.

அடுத்த படம் நாம் பண்றோம். கதை ரெடி பண்ணிக்கோங்க என்றார். அவர் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, அவருடன் சேர்ந்து அடுத்த படம் செய்வ்து என்று உறுதியாக இருந்தேன்.

ஆனால், இடையில் ஒரு ஹீரோ என்னுடன் படம் பண்ணுவதில் உறுதியாக இருந்தார். ஆனால், நாங்கள் ரிச்சர்டுடன் படம் செய்ய இருக்கிறோம் என்று சொல்லிவிட்டோம்.

சிம்புவுடன் இணைந்து படம் செய்வீர்களா? என்று ரசிகர் என்னிடம் கேட்டார். என்னிடம் கதை கூட இருக்கிறது. அவர் ஓகே என்றால், கண்டிப்பாக பண்ணலாம் என்றேன்.

அப்படியிருக்கும் போது ஒரு தயாரிப்பாளர் போன் செய்து என்னிடம் சிம்புவின் கால்ஷீட் இருக்கிறது. நீங்க ஓகே என்றால் பண்ணிடலாம் என்றார். நான், எனது அடுத்த படம் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனால், அடுத்த படம் சிம்புவுடன் எதிர்பார்க்கலாம் என்றேன்.

அது ஒரு கேங்க்ஸ்டர் படம். மீனவ மக்களின் வாழ்க்கையைப் பற்றிய படம். ஆம், அவர்களுக்கு பயனுள்ள ஒரு படமாகக் கூட இருக்கும்.

வட சென்னையை மையப்படுத்திய படம். ஆனால், அது கன்ஃபார்ம் கிடையாது. என்னுடைய விருப்பம். சிம்பு ஓகே என்றால் நானும் ரெடி என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version