Home சினிமா கோலிவுட் அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் சரத்குமார் – சசிகுமார்?

அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக்கில் சரத்குமார் – சசிகுமார்?

0
Sarathkumar and Sasikumar Ayyappanum Koshiyum Tamil Remake

Ayyappanum Koshiyum Tamil Remake;அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் சரத்குமார் மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சஜி இயக்கத்தில் பிஜூ மேனன் மற்றும் பிருத்விராஜ் ஆகியோரது நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் அய்யப்பனும் கோஷியும்.

இந்தப் படத்தில், பிருத்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும், பிஜூ மேனன் சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.

இவர்களுடன் இணைந்து ரஞ்சித், கௌரி நந்தா, அன்னா ராஜன், அணில் நெடுமங்காடு ஆகியோர் நடித்திருந்தனர்.

அதிகாரத்தில் இருப்பவருக்கும், ஆதிவாசிப் பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் ஈகோ மோதல்தான் அய்யப்பனும் கோஷியும் படத்தின் கதை.

அய்யப்பன் நாயர் என்ற கதாபாத்திரத்தில் பிஜூ மேனனும், கோஷி குரியன் கதாபாத்திரத்தில் பிருத்விராஜனும் நடித்திருந்தனர். ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

அட்டப்பாடி என்ற வனப்பகுதியில் மதுபானங்கள் வைத்திருக்க தடை இருக்கும் நிலையில், அதையும் மீறி, மதுபாட்டில்கள் எடுத்து செல்லும் பிருத்விராஜ் ஊட்டி செல்லும் வழியில் இருந்த போலீஸ் பரிசோதனையில் பிஜூ மேனனிடம் சிக்கிக் கொள்கிறார். அப்போது இருவருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. இதை வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தமிழில் இப்படம் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. அய்யப்பனும் கோஷியும் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார்.

பைவ் ஸ்டார் கதிரேசன், வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் வந்த பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் சரத்குமார் மற்றும் சசிகுமார் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்காகத்தான் சரத்குமார் மீசை, தாடியுடன் தோற்றமளிக்கிறார் என்கிறது தகவல்.

இது குறித்து தயாரிப்பாளர் கதிரேசன் கூறுகையில், அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு இன்னும் யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது சரத்குமார் பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக இருக்கிறார். இதே போன்று சசிகுமாரும் எம்ஜிஆர் மகன் படத்தின் ரிலீஸ்க்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version