Home சினிமா கோலிவுட் கொரோனாவுக்கு மாஸ்டர் மைன்ட் மருந்து கண்டுபிடிக்கும்: மாஸ்டர் புதிய போஸ்டர் வெளியீடு!

கொரோனாவுக்கு மாஸ்டர் மைன்ட் மருந்து கண்டுபிடிக்கும்: மாஸ்டர் புதிய போஸ்டர் வெளியீடு!

0

Master Poster; மாஸ்டர் படம் இன்று வெளியாகாத நிலையில், மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை (Master Poster) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால், யாருடைய கண்ணு பட்டுச்சோ தெரியல, ஊரெல்லாம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன. மேலும், ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

மாஸ்டர் படம் தொடங்கப்பட்டதிலிருந்து பல சிக்கல்களை கடந்து வந்துள்ளது. ஆம், டெல்லியில் காற்று மாசுபாடு காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது.

நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று போராட்டம் நடந்தது. இவ்வளவு ஏன், விஜய் வீட்டில் ஐடி ரெய்டும் நடந்தது.

இப்படி பல கட்ட சோதனைகளை கடந்து மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகும் தேதியும் அறிவிக்கப்பட்டது.

Master Poster

ஆனால், அதற்குள்ளாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஊரடங்கும் நிலை ஏற்பட்டுவிட்டது.

எனினும் படம் வெளியாகும் நாளான இன்று மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

ஆம், தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ்டர் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அதோடு, உங்களை போன்று, நாங்களும் உங்கள் வரவை மிஸ் செய்கிறோம், ஒரு மாஸ்டர் மைன்ட் மருந்து கண்டுபிடித்து கொரோனாவுக்கு முற்றுப்புள்ளை வைக்கும் என்று நம்பிக்கை இருக்கிறது. இன்னும் வலிமையுடன் விரைவில் வருகிறோம் நண்பா’ என பதிவிட்டுள்ளனர்.

தளபதி விஜய்யின் இந்த புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version