Home சினிமா கோலிவுட் நாடோடிகள்: விஜய்க்கு வில்லன்‌ எஸ்.ஏ.சி.

நாடோடிகள்: விஜய்க்கு வில்லன்‌ எஸ்.ஏ.சி.

0
நாடோடிகள்: விஜய்க்கு வில்லன்‌ எஸ்.ஏ.சி.

நாடோடிகள்: விஜய்க்கு வில்லன் எஸ்.ஏ.சி. விஜய் நடிக்க வேண்டிய பல சூப்பர் ஹிட் படங்கள் தவறிப்போனதற்கு காரணம் எஸ்.ஏ.சி. சமுத்திரக்கனி நாடோடிகள் பற்றி கூறியுள்ளார்.

நாடோடிகள் முதல் பாகம்

2009 ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் நாடோடிகள். இந்த திரைப்படம் வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

சமுத்திரக்கனி என்னும் இயக்குனருக்குள் இப்படியொரு திறமை இருக்கிறதா? என்று ஆச்சரியம் வர செய்தது மட்டுமல்லாமல், சசிகுமாருக்கு நடிகர் என்ற அங்கீகாரம் பெற்று தந்த திரைப்படம்.

இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்காக பல நடிகர்களுக்கு கதை சொல்லிருக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் பல முன்னணி நடிகர்கள் நிராகரித்திருக்கிறார்கள்.

ஏனென்றால் அதற்கு முன்பு இவர் இயக்கிய உன்னை சரணடைந்தேன் மற்றும் நெறஞ்ச மனசு திரைப்படங்களின் படுதோல்வி முன்னனி நடிகர்களை நிராகரிக்க வைத்திருக்கிறது.

இருப்பினும் தன் கதையின் மீது உள்ள நம்பிக்கையால் தனக்கு வில்லன் வேடம் கொடுத்து தன்னை நடிகனாக முன்னிறுத்திய இயக்குனரை தன் கதையின் நாயகனாய் அதில் வெற்றியும் கண்டார் சமுத்திரக்கனி.

நாடோடிகள் படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட முன்னணி நடிகரைப் பற்றி  சமீபத்திய பேட்டி ஒன்றில் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

நாடோடிகள் கதையை நிராகரித்த எஸ்.ஏ.சி

இந்தக் கதையை உச்ச நடிகர் இளைய தளபதி விஜய் அவர்களிடம் சொல்வதற்கு சென்றேன். பொதுவாக விஜய் படங்களுக்கு அவருடைய அப்பா கதை கேட்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதுபோலத்தான் விஜய்யின் தந்தை சந்திரசேகர் கதையை கேட்டு விட்டு; ‘தம்பி’, இதுபோன்ற கிராமத்து கதைகளில் நடிப்பதில்லை. அதுவும் நீங்க மூன்று ஹீரோ கதைக்களம் என்று கூறுவதால் இது தம்பிக்கு செட் ஆகாது என்று இந்த படத்தை தவிர்த்து விட்டார் சந்திரசேகர்.

தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. விஜய் நடிக்க வேண்டிய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நழுவி போனதற்கு விஜய்யின் தந்தை தான் காரணம் என்ற பேச்சு உண்டு.

அதை நிரூப்பிக்கும் வகையில் சமுத்திரக்கனி சொல்லிருப்பது, இது உண்மைதான் போல என்று யோசிக்க வைக்கிறது. எது எப்படியோ? நாடோடிகள் போன்ற மெகா ஹிட் படத்தை விஜய் தவிர்த்தது வருத்தமான விஷயமே.

இதை அறிந்த விஜய் ரசிகர்கள் இப்படியொரு மெகாஹிட் படத்தை மிஸ் செய்து விட்டாரே நம் தளபதி என்று ஏங்கி வருகிறார்கள்.

பிம்பதிற்குள் நடிகர்கள்

பொதுவாகவே உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ஒரு பிம்பத்திற்குக்குள் மாட்டி கொள்கிறார்கள். அதனால் தன்னை ரசிகர்கள் எப்படி பார்க்க விரும்புகிறார்களோ, அப்படியே பயணிக்க விரும்புகிறார்கள்.

இதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஒரு நடிகனை இழந்து இமெஜ் என்ற வட்டத்துக்குள் சிக்கி தவிக்கிறார்கள்.

இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற எண்ணத்திலேயே நல்ல கதைகளை தவிர்த்து விடுகிறார்கள்.

நாயகன் போக்கில் கதை

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நல்ல கதைகளில் தங்களின் நடிகர்களைப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், நடிகர்கள் சரியாக வருமா என்ற தயக்கத்தில் நல்ல கதைகளைத் தவிர்த்து விடுகிறார்கள்.

நாயகன் போக்கில் கதை பயணிக்காமல், கதையின் போக்கில் நாயகனாய் பயணித்தால் அனைத்து தரப்பும் ரசிகர்களும் விரும்பும் நாயகனாய் மாறலாம் என்பது இதர ரசிகர்களின் கருத்து.

விஜய்க்கு வில்லன் எஸ்.ஏ.சி.

சமீபத்தில் விஜய்யின் டிராக் சற்று மாறியுள்ளது. பழைய இயக்குனர்களை ஓரங்கட்டிவிட்டு ஹிட் படங்கள் கொடுத்து வரும் புதுமுக இயக்குனர்களுடன் கைகோர்க்க துவங்கியுள்ளார்.

இது சற்று ஆரோக்கியமான விஷயம். இனி வரும் படங்களின் விஜய் வித்தியாசமான கதைகளில் நடிப்பார் என்றே தோன்றுகிறது.

பார்ப்போம் இனி விஜய்க்கு கிடைக்கும் நல்ல கதைகளை தடுக்கும் வில்லன்‌ எஸ்.ஏ.சி. ஆக இருக்கமாட்டார் என நம்புவோமாக.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version