Home Latest News Tamil பெண்கள் தின சிறப்பு பதிவு: சில்லுக்கருப்பட்டி ஹலிதா ஷமிம்

பெண்கள் தின சிறப்பு பதிவு: சில்லுக்கருப்பட்டி ஹலிதா ஷமிம்

0
பெண்கள் தின சிறப்பு பதிவு சாதனை மங்கைகள்
பெண்கள் தின சிறப்பு பதிவு: சில்லுக்கருப்பட்டி ஹலிதா ஷமிம் பெண் இயக்குனர். சாதனை மங்கைகள், பெண்களாலும் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்.
பெண்கள் தினச்சிறப்பு பதிவு : சில்லுக்கருப்பட்டியில் நம்மை கரைய வைத்த “ஹலிதா ஷமிம்” பற்றிய பதிவு!
சாதனை மங்கைகள்
அனைத்து பெண்களுக்கும்
இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் .

உலகெங்கும் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலுமே தங்களது இருப்பையும் தங்களது பங்களிப்பையும் உறுதி செய்துகொண்டிருக்கின்றனர் பெண்கள்.

நம் தமிழ் சினிமாத்துறையிலும் பல பெண்கள் தனது பங்களிப்புகளை சிறப்பாக கொடுத்துள்ளார்கள், கொடுத்துக்கொண்டும் இருக்கிறார்கள்.

திரைப்பட இயக்குனர்களாகவும் தங்களை நிலைநிறுத்தி கொண்டுள்ளனர். தற்போதும் நிலைநிறுத்தி கொண்டிருக்கிறார்கள்.

கடந்த வருடம் (2019) டிசம்பர் மாதத்தில் வெளிவந்து கமர்ஷியலாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. அப்படத்தை இயக்கியவர் ஒரு பெண். அவரின் பெயர் ஹலிதா ஷமீம்.

ஹலிதா ஷமிம் அவர்களின் பூவரசம் பீப்பீ

சமுத்திரக்கனி, மிஷ்கின் மற்றும் விக்ரம் வேதா படத்தின் இயக்குனர்களான புஷ்கர்-காயத்ரி போன்றோர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து பல வருட போரட்டத்திற்கு பிறகு “பூவரசம் பீப்பீ” என்ற படத்தை அவர் இயக்கினார்.

அவர் இயக்கிய முதல் திரைப்படம் அதுதான். படத்திற்கு விமர்சன ரீதியாக ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்த போதும், படம் வெளிவந்த புதிதில்  பெரும்பாண்மையான மக்களிடம் சென்று சேரவில்லை.

பிறகு கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சியின் வாயிலாக பூவரசம் பீப்பீயை நிறைய மக்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.

பூவரசம் பீப்பீ திரைப்படத்தில் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணுக்கு அறங்கேறிய கொடுமைகளுக்கு  காரணமானவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிறுவர்கள் மூலம் பாடம் புகட்டுவது போன்ற நிகழ்வை சிறப்பாக கையாண்டிருப்பார், ஹலிதா அவர்கள்.

நாம் கரைந்த சில்லுக்கருப்பட்டி

கடந்த வருடங்களில் தமிழில் எக்கச்சக்க படங்கள் வெளியாகிருந்தாலும் மிகச்சில படங்களே வெற்றி பெற்றன.

அவற்றில் சில்லுக்கருப்பட்டி திரைப்படம் தவிர்க்க முடியாதது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை

சில்லுக்கருப்பட்டி படம் முழுவதும் அன்பையும் காதலையும் அழகியலுடன் கலந்திருப்பார், இயக்குனர் ஹலிதா அவர்கள்.

ஒரு ஆண் பார்வையில் திரைப்படம் இருப்பதற்கும் பெண் பார்வையில் திரைப்படம் இருப்பதற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.

அவைகளைப் பார்த்தவுடன் தெரிந்துவிடும் என்றெல்லாம் சொல்லமுடியாது. ஆனால் நிச்சயமாக இருக்கும். அப்படியொரு பார்வை படம் முழுக்க நிறைந்திருக்கும்.

‘Hey அம்மு’வில் வரும் சுனைனாவின் மேனரிசம்களும் சமுத்திரக்கனியின் மேனரிசம்களுமே அதற்கு சாட்சி.

அந்தாலஜி

நமது கோலிவுட்டில் “அந்தாலஜி” முறையில் வெளிவந்து வசூல் விமர்சனம் என அனைத்து ரீதியாகவும் வெற்றி பெற்ற முதல் படம் இதுதான்.

இதற்கு முன்னமே இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் வெளியீட்ட “அவியல்” மற்றும் துல்கர் சல்மான் நடித்த “சோலோ” போன்ற திரைப்படங்கள் அந்தாலஜி முறையில் வந்திருக்கிறது.

அப்படி அவைகள் வந்திருந்தாலும் சில்லுக்கருப்பட்டிக்கு கிடைத்த வரவேற்பும் வெற்றியும் அவற்றிற்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

சில்லுக்கருப்பட்டி அந்தாலஜி முறையில் வரும் திரைப்படங்களை மக்கள் இரசிப்பார்கள் கொண்டாடுவார்கள் என்ற நம்பிக்கையை தந்திருக்கிறது.

தன்னை ஒரு பெண் இயக்குனர் என்று தனித்து பிரகடனப்படுத்துவதை பெறும்பாலும் விரும்பாதவர்தான் ஹலிதா அவர்கள்.

ஏனெனில் Gender discrimination எதிலும் இருக்க கூடாது என எண்ணுபவர் அவர். தெரிந்தோ தெரியாமலோ அவர் மற்ற பெண்களுக்கான வாசலையும் திறந்து வைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை.

திரைப்படத்திலும் சுனைனாவின் கதாப்பாத்திரம் மூலம் அவர் செய்தது பல குடும்பங்களுக்குள் ஆனந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது நிதர்சனம்.

பூவரசம் பீப்பீ திரைப்படமாகட்டும், சில்லுக்கருப்பட்டி திரைப்படமாகட்டும் இரு படங்களிலுமே வசனங்கள் சிறப்பாக அமைந்திருக்கும்.

ஹலிதா அவர்களின் மிகப்பெரிய பலமாக இருப்பது வசனங்களும் கதையை எளிமையாக சொல்லும் திரைக்கதையும்தான்.

அடுத்து ஹலிதா ஷமிம் அவர்களின் இயக்கத்தில் இருந்து வரவிருக்கும் ‘மின்மினி’ திரைப்படமும், ‘ஏலே’ திரைப்படமும் வெற்றிபெற வேண்டுமென்ற வாழ்த்துகளோடு,

பெண்கள் தின சிறப்பு பதிவு. இனிய பெண்கள் தின நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அனைத்து பெண்களுக்கும் 

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்!

சிறப்பாக வாழுங்கள்! வழிநடத்துங்கள்!

அனைவருக்கும் ஆனந்தம் நிறையட்டும் !

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version