Home சினிமா கோலிவுட் Women’s day Song: பிகில் சிங்கப்பெண்ணே பாடல்.!

Women’s day Song: பிகில் சிங்கப்பெண்ணே பாடல்.!

1
813

Women’s day Song: பிகில் சிங்கப்பெண்ணே பாடல்.! மகளிர் தினம் அன்று பெண்களைக் கொண்டாடும் பாடல்கள். சமீபத்தில் வெளியான பிகில் சிங்கப்பெண்ணே பாடல் வரிகள்

பெண்ணிய பாடல்கள் (Women’s day Song Tamil)

பெண்களை போற்றும் விதமான பாடல்கள், பெண்களை கொண்டாடும் பாடல்கள், பெண்களை மொட்டிவேட் செய்யும் பாடல்கள் என பெண்களை பற்றியான பல பாடல்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறது.

பெண்களுக்கான காலத்திற்கும் நிலைக்குமாறும் பல பாடல்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றன. இக்காலக்கட்டத்திலுமே அப்படியான பாடல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமாவில் பல பாடலாசிரியர்கள் பெண்களைப் பற்றியான பாடல்களை தொடர்ந்து எழுதிய வண்ணம் உள்ளனர்.

இருப்பினும் தற்போதைய சூழலில் மிகவும் பிரபலமாக உள்ள பாடலாசிரியர் என்றால் அதில், விவேக் அவர்களின் பெயர் உச்சத்தில் இருக்கும்.

ஆம்! பாடலாசிரியர் விவேக் அவர்களும் மிகக் குறுகிய காலத்தில் பெண்களுக்கான பாடல்களை பெண்களை பற்றியான பாடல்களை தொடர்ந்து எழுதிய வண்ணம் உள்ளார்.

சிங்கப்பெண்ணே பாடல் வரிகள்

2019-ம் ஆண்டு வெளிவந்த தளபதி விஜய் அவர்கள் நடித்த பிகில் திரைப்படம். இதில் பாடலாசிரியர் விவேக் பாடல் எழுதியுள்ளார்.

அவர், சிங்கப்பெண்ணே பாடல் வரிகள் (singappenney song lyrics) எழுத இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அப்பாடலுக்கு இசையமைத்ததோடு நிற்காமல் பாடலையும் பாடி சிங்கப்பெண்ணே-க்கு வலிமை சேர்த்தார்.

பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும்

பெண்களை போற்றியும்

பெண்களின்  வலிமையை சொல்லியும்

பெண்களை மொட்டிவேட் செய்யும் விதத்தில் இருந்தது.

பாடலில் விவேக் அவர்கள் பெண்களுக்கு வலிமை மிகுந்த சொற்களையே உபயோகித்திருப்பார். உதாரணமாக “சிங்கப்பெண்ணே” “அக்னிச்சிறகே” போன்ற சொற்களை சொல்லலாம்.

சிங்கப்பெண்ணே பாடலில்  விவேக் அவர்கள் மிக எளிமையாகவும் அதே சமயம் பாடலின் தீவிரம் துளியும் குறையாதவாறு வரிகளை அமைத்திருப்பார். உதாரணமாக பாடலின் பல வரிகளைச் சொல்லலாம்.

ஏறு ஏறு ஏறு

நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு

உன்னை பெண்ணென்று

கேலி செய்த கூட்டம் ஒருநாள்

உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு!

அன்னை தங்கை மனைவி என்ற

நீ வடித்த வியர்வை – உந்தன்

பாதைக்குள் பற்றும்

அந்த தீயை அணைக்கும்

நீ பயமின்றி துணிந்து செல்லு.

என்ற வரிகளின் மூலம் பெண்களை மோட்டிவேட் செய்திருப்பார் விவேக் அவர்கள்.

“உன்னால் முடியாதென்று

ஊரே சொல்லும் நம்பாதே,

பொய் பரிதாபம் காட்டும்-எந்த

வர்க்கத்தோடும் இணையாதே”

என்ற ஒரு அறிவுரையையும் கூறியிருப்பார்.

“உலகத்தின் வலியெல்லாம்

வந்தால் என்ன உன் முன்னே?

பிரசவத்தின் வலியை தாண்ட

பிறந்த அக்னி சிறகே”

என்று வலிமையையும் !

இதோ காயங்கள் மாறும் கலங்காதே

உன் துன்பம் வீழும் நாள் வரும்

என்று நம்பிக்கையையும் பாடலில் விதைத்திருப்பார்.

மாதரே பாடல் வரிகள்:

பிகில் திரைப்படத்திலேயே  பாடலாசிரியர் விவேக் அவர்கள் எழுதிய மற்றுமொரு பெண்களை பற்றியான பாடல் ஒன்று உள்ளது.

மாதரே என்ற பாடல்தான் அது! சிங்கப்பெண்ணே மக்களிடம் சென்று சேர்ந்த அளவிற்கு மாதரே சென்று சேரவில்லை என்பதுதான் உண்மை.

இப்பாடல் முழுவதும் பெண்களின் சார்பில் பெண்களே தங்களின் இன்னல்களை பற்றி சொல்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும்.

சின்மயி அவர்கள் இப்பாடலை மிகவும் உணர்வுப்பூர்வமாக பாடியிருப்பார். இப்பாடலை பெண்களை இன்னல்களுக்கு ஆளாக்கும் ஆண்கள் கேட்பதற்கெனவே உருவாக்கப்பட்ட தோரனையில்தான் இருக்கும்.

வரிகளும் அதற்கேற்பவே பிண்ணப்பட்டிருக்கும்.

காதல் தம்மை இழிவு செய்யும்

மடமை கொளுத்த சபதம் செய்தோம்

இன்றோ மடமை வளர்க்கிறோம்

மாதர் உடல்தான் கொளுத்தினோம்

ஆணின் உலகில் விசுற பட்டோம்

மெளனம் பேச படைக்க பட்டோம்

அளவே இல்லா விடுதலை

ஆனால் இரவாகும் நொடிவரை

என்ற வரிகளின் ஆரம்பத்திலே பெண் சுதந்திரத்தின் நிலையை அப்பட்டமாக சொல்லியிருக்கிறார் விவேக் அவர்கள்.

கண்ணால் உரசுகிறார்

பலம் கொண்டு நசுக்கிறார்

வலிமை வரம் எனவே

மீசையை ஏற்றுகிறார்

ஆண்மை அது மீசை முடி

ஓரத்திலே பூப்பதில்லை

பெண்ணை நீ கண்ணியமாய்

பார்ப்பதிலே துளிர்க்கும்

என்கிற வரிதான் இப்பாடலின் மிகச்சிறந்த வரியாக இருக்க முடியும். ஆணின் ஆண் என்ற கர்வத்தை உடைக்கும் வகையில்தானே இவ்வரிகள் உள்ளது.
இந்த பாடல்கள் மட்டுமில்லாமல் ஜோதிகா அவர்கள் நடித்த  36 வயதினிலே படத்தில் இருந்து  “வாடி ராசாத்தி”  என்ற பாடலையும் இறைவி திரைப்படத்திற்காக “மனிதி வெளியே வா” போன்ற பெண்களுக்கான பாடல்களையும் பாடலாசிரியர் விவேக் அவர்கள் எழுதியுள்ளார்.
பெண்கள் தினத்தன்று பெண்ணியம் சார்ந்த பாடல்களை வாட்சாப்பில் ஸ்டேட்டஸாக வைப்பதோடு நிறுத்திவிடாமல் பெண்களுக்கு எந்த விதத்திலும் இன்னல்கள் கொடுக்காமல் இருப்போம்.
காயங்கள் ஆறும் கலங்காதே
உன் துன்பம் விழும் நாள் வரும் !
உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்! Happy Women’s Day Wishes and staus.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here