Home வரலாறு செர்னோபில் விபத்து நினைவு நாள் வரலாற்றில் இன்று

செர்னோபில் விபத்து நினைவு நாள் வரலாற்றில் இன்று

0

செர்னோபில் விபத்து நினைவு நாள் வரலாற்றில் இன்று, Chernobyl Disaster Explanation or Chernobyl Nuclear Accident History. செர்னோபில் அணு உலை விபத்து.

1986ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் உக்ரேனிலுள்ள செர்னோபில் உலையில் நடந்த விபத்தில் அதன் சுற்று வட்டார பகுதிகள் மிகுந்த சேதம் அடைந்தன.

1986ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி அந்த உலையிலுள்ள குளிர் சாதன உறை வேலை செய்யவில்லை. இதனால் வெப்ப அதிகரிப்பு ஏற்பட்டு தீ பிடிக்க ஆரம்பித்தது.

அதனால் சுமார் 20 வகையான கதிர் வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் புகுந்தன. காற்று மண்டலத்தில் புகுந்த இக்கதிர் வீச்சுப் பொருள்கள் அங்கிருந்த நிலத்தில் விழுந்து சிதறின.

இந்த கதிரியக்க வீழ் பொருள்கள் பத்து ஹிரோஷிமாக் குண்டுகளுக்கு சமமானதாக கருத்தப்படுகின்றது. உலகிலயே மிக மோசமான அணு உலை விபத்து இதுவாகும்.

செர்னோபில் விபத்து விளைவுகள்

விபத்து ஏற்படும் பொழும் இதன் ஆபத்துக்கு ஏற்பாற்போல் உயிர்ழப்புகள் ஏற்படவில்லை. முதலில் 30 பேர் உயிரழந்தனர். பின்னர் படிப்படியாக 2000 பேர் வரை இறந்தனர்.

உடனடி விளைவை விட வருங்கால சந்ததிகளை அதிகம் பாதிக்கும் வண்ணம் காற்று, நிலம், நீர் ஆகியைவைகளில் இதன் கதிர்வீச்சு கலந்துள்ளது. அதனால் அணு உலையை சுற்றி 30 கிமீ வரை மக்கள் வசிப்பதற்கு அனுமதி இல்லையாம்.

இரத்தக்குழாய் வெடித்து அதிக அளவு இரத்தப்போக்கு, உறுப்புச் சிதைவு, முடி கொட்டுதல், கண்புரை,

இரத்தத்தில் இயல்புக்கு மாறான நிலைகள், தோல்புற்று நோய், சீழ்பிடித்து ரணமாதல், கதிர்வீச்சு நோய் முதலிய நோய்கள் உருவாகின.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version