Home Latest News Tamil சர்கார் கதை திருட்டு? எஸ்.ஏ.சந்திரசேகர், முருகதாஸ் கூட்டு!

சர்கார் கதை திருட்டு? எஸ்.ஏ.சந்திரசேகர், முருகதாஸ் கூட்டு!

849
0

சர்கார் கதை யாருடையது? சர்கார் கதை யார் மூலம் திருடப்பட்டது. வெளிவராத உண்மைகள்.

முருகதாஸ் கதை திருடினார் என்ற குற்றச்சாட்டு தீனா தொட்ட காலம் முதலே உள்ளது. விஜய் படத்திற்கு சிக்கல் என்பது… இன்று நேற்று அல்ல, அவர் அரசியலில் குதிப்பார் என எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவித்த காலம் முதலே உள்ளது.

சர்கார் கதைத் திருட்டு. இதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. உண்மையில் என்ன நடந்தது? ஆதி முதல் அந்தம் வரை.

‘செங்கோல்’ என்ற தலைப்பில் வருண் ராஜேந்திரன் 90-களிலேயே ஒரு அரசியல் கதையை உருவாக்கிவிட்டார். அக்கதையின் முக்கிய உயிர் நாடியே ‘கள்ள ஓட்டு’ பிரச்சனை.

பல வருடங்களாக, இக்கதையை வைத்து… வாய்ப்புத் தேடி அலைந்துள்ளார். ஒரு வழியாக, விஜய்யிடம் கதை சொல்ல அணுகியபோது, எஸ்.ஏ.சியின் அறிமுகம் கிடைத்தது.

விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்கின்ற ஆசையில், எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குனராக சேர்ந்துள்ளார் வருண் ராஜேந்திரன்.

இறுதிவரை உதவியாளராக மட்டுமே இருக்க முடிந்தது. விஜய்யின் கால்சீட் கிடைக்கவில்லை. எஸ்.ஏ.சியும் படங்கள் இயக்குவதில்லை. உதவி இயக்குனர் பணியும் முற்றுப்பெற்றது.

எஸ்.ஏ.சி.யிடம் இருந்து விலகி செல்வதற்கு முன்பே, செங்கோல் படத்தின் முழு ஸ்கிரிப்ட்டையும் எஸ்.ஏ.சி.யிடம் கொடுத்துவிட்டார் வருண்.

கதை அங்கிருந்து விஜய்யிடம் சொல்லப்பட்டது. பின்பு முருகதாசிடம் கதை பற்றி கூறப்பட்டுள்ளது.

இப்படி தான் கதை முதலில் கசிந்து, பின்பு படமாகியுள்ளது. இருப்பினும் பாக்யராஜ், விஜய் மற்றும் எஸ்.ஏ.சியின் மானத்தை காப்பாற்றியுள்ளார். ஏன்?

சர்கார் என படத் தலைப்பு வைத்ததுமே, வருணுக்கு லேசாக சந்தேகம் எழுந்துள்ளது. படத்தின் டீசர் வெளியான அடுத்த நொடியே கண்டுபிடித்துவிட்டார். இது நம்முடைய செங்கோல் கதை என்று.

உடனே, இதுபற்றி எழுத்தாளர் சங்கத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார். அவருடைய அதிர்ஷ்டம், பாக்யராஜ் தலைவராக இருந்தது. காரணம், இருவரும் நன்கு பழக்கம்.

இருவரின் கதையையும் மொத்தமாக அலசி ஆராய்ந்ததில், கதை சுடப்பட்டது என நிரூபணமாகியது.

இந்த விஷயத்தை, காதோட காதாக வைத்து முடித்துவிடலாம் என பாக்யராஜ் முருகதாசிடம் சுமூகமாக பேசியுள்ளார்.

ஆனால், முருகதாஸ் எந்த சமரசத்திற்கும் ஒத்துவரவில்லை. கோர்ட் வரை செல்லவும் தயார் எனக்கூறியுள்ளார்.

சீனியர் இயக்குனர், திரைக்கதை ஜாம்பவான் சொல்லியும் முருகதாஸ் கேட்கவில்லை. எழுத்தாளர் சங்க விதிமுறைகளும், முருகதாசுக்கு ‘ரெட் கார்ட்’ போட சாதகமாக இல்லை.

முதலில் முருகதாசுக்கு ஒரு அறிக்கை. அடுத்து வருணுக்கு ஒரு அறிக்கை என இரு அறிக்கைகள் எழுத்தாளர் சங்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது.

பாக்யராஜ் அழுத்தத்தை பார்த்து அரண்டுபோன முருகதாஸ், பட ரிலீசுக்கு முன்பே மீடியாவை சந்தித்துவிட்டார்.

கத்தி படத்தின்போது, பாக்யராஜ் போன்ற ஒரு தூண் மீஞ்சூர் கோபிக்கு கிடைக்கவில்லை.

மீஞ்சூர் கோபி, வக்கீல்களின் நயவஞ்சக வலையில் வீழ்ந்து, கேஸை வாபஸ் வாங்க, கத்தி படம் கடைசி நிமிடத்தில் ரிலீஸ் ஆனது.

மீண்டும் விடாமுயற்சியுடன், முருகதாசை இறுக்கப் பிடித்து இழப்பீட்டுத் தொகையை பெற்றார் மீஞ்சூர் கோபி.

ஆனால் சர்கார் படத்தில், பாக்யராஜ் உருவில் ஒரு சங்கமே எதிர்த்து நிற்கின்றது. வீம்பு பிடித்தால், நிச்சயம் படம் வெளிவரப்போவதில்லை என்பது உறுதி.

முருகதாஸ் மீடியாவில் ஒப்பாரி வைக்க. பாக்யராஜ் மீது வீண் பழி சுமத்தப்பட்டது. ஏதோ உள்நோக்கத்துடன் பாக்யராஜ் செயல்படுகின்றார் என முருகதாஸ் கூறினார்.

பதிலுக்கு பாக்யராஜ், சர்கார் படத்தின் முழுக்கதையையும் மீடியா முன் கொட்டித் தீர்த்துவிட்டார். முருகதாஸுக்கு அழுத்தம் கொடுப்பதால், அவரை விட எனக்கு தான் பாதிப்பு அதிகம் என்று பாக்யராஜ் வெளிப்படையாக கூறினார்.

முருகதாஸ் எட்டு அடி பாய்ந்தால், பாக்யராஜ் 16 அடி பாய்ச்சலில் செல்ல, பாக்கியராஜை சமாளிக்க முடியாமல், முருகதாஸ் திணறிவிட்டார்.

மேலும், வருணை நீதிமன்றம் நட வைத்து, பக்கபலமாக இறுதிவரை பாக்யராஜ் கூடவே இருந்துள்ளார்.

விஜய் மற்றும் சன்பிக்சர் தரப்பு படத்தை வெளியிட வேண்டும் சுமூகமாக செல்லுங்கள் என முருகதாஸுக்கு அழுத்தம் கொடுத்தது.

மேலும், நீதிமன்றத்தில் வருணுக்கு சாதகமான நிலை என்றவுடன், வேறு வழியே இல்லாமல் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு விட்டார் முருகதாஸ்.

ஆனால், இறுதிவரை கதையை முருகதாஸ் திருடிவிட்டார். எஸ்.ஏ.சி திருடிவிட்டார் என முழு உண்மைகளையும் பாக்யராஜ் வெளியில் சொல்லி அவர்கள் பெயரை கெடுக்க விரும்பவில்லை.

ஓவ்வொரு முறையும் மீடியாவை சந்திக்கும் முன், விஜய், எஸ்.ஏ.சி., சன் பிக்சர்ஸ் மற்றும் முருகதாஸ் தரப்புகளிடம் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டு காய் நகர்த்தி உள்ளார்.

இறுதியாக இன்று நீதிமன்ற வாசலில், வருண் எஸ்.ஏ.சியிடம் உதவியாளராக பணியாற்றிய விவரத்தை வெளிப்படையாக கூறினார்.

வருண், பாக்யராஜ் உதவியாளர் என முருகதாஸ் மீடியாவில் கூறியதால், என் உதவியாளர் என்பதை விட எஸ்.ஏசி.யிடம் அதிக நாள் பணி புரிந்துள்ளார் என விளக்கம் கொடுத்துள்ளார்.

எந்த தரப்பும் பாதிக்கப்படக்கூடாது என்பது பாக்யராஜ் எண்ணம். பணம் பத்தும் செய்யும் என்பது முருகதாஸ் எண்ணம்.

சர்கார் படத்தின் கதை வருணுடையது என முருகதாஸ் டைட்டில் கார்டில் போட சம்மதிக்கவில்லை. தன்னுடைய பெயர் களங்கப்படும் என எடுத்துக்கூறினார்.

இதனால், கதைக்கரு அல்லது கதை சிந்தனை என வருண் பெயர் போடுங்கள் என அறிவுறுத்தினார். இதற்கு முருகதாஸ் ஓகே சொல்ல பிரச்சனை முற்றுப் பெற்றது.

மேலும், சிரித்த முகத்துடன் முருகதாஸ் வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில், வருணின் கதைத் திறமையை பார்த்து வியக்கிறேன். பாராட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

இத நீங்க நாலு சுவத்துக்குள்ள இருக்கும்போதே செஞ்சிருந்தா, அந்த டைட்டில வருண் பேர கூட யாரு கவனிச்சு படிச்சிருக்க கூட மாட்டங்களே?

முருகதாஸ் யார் கதை திருடினார் என குற்றச்சாட்டு எழுகின்றதோ அவர்கள் எல்லாம் ஓவர் நைட்டில் பாப்புலராகின்றனர் என்பது நிதர்சனமான உண்மை.

 

Previous articleMovie Review Jarugandi – நிதின் சத்யாவால் தேசிய விருது மிஸ்!
Next articleSarkar Movie Review | Vijay | Murugadoss | Keerthi Suresh | Fictional
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here