Home மருத்துவம் கொரோனாவை வென்று குணமடைந்தவர்களின் உணர்ச்சிகரமான தகவல்கள்

கொரோனாவை வென்று குணமடைந்தவர்களின் உணர்ச்சிகரமான தகவல்கள்

428
0
thomas mariyamma corona recovery

கொரோனாவை வென்று குணமடைந்தவர்களின் உணர்ச்சிகரமான தகவல்கள், Corona Recover Stories from around the World. கொரோனா குணமடைந்தவர்களின் கதை.

கேரளாவில் கொரோனா பாதித்த வயதில் மூத்த தம்பதியரான தாமஸ் 93வயது, மரியம்மா 88வயது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உலகையே ஆச்சரியப்படுத்தினார்கள். அரிதிலும் அரிது என இந்த நிகழ்வை அனைவரும் புகழ்கிறார்கள்.

இரண்டாம் உலகப்போரில் போராடிய 95 வயதான வில்லியம் கெல்லி சிறுநீரக குறைபாடு, ரத்த அழுத்தம் மற்றும் இருதைய கோளாறுகள் இருந்தும் கொரோனா பாதிப்பில் உயிர் பிழைத்தார்.

திடமான உடலும் மனதும் இருந்ததே இவர் பிழைக்க காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இது உண்மையில் வைரம் பாய்ந்த்த கட்டை தான்.

william kelly WW2 corona won
95 age William Kelly WW2 veteran won corona

இரண்டு உலகப்போர்களை சந்தித்த 101 வயதான இத்தாலியை சேர்ந்த ஒருவர் 1918ஆம் ஸ்பெயின் காய்ச்சல் பரவும் பொழுது பிறந்தவர்.

தற்போது கொரோனா பாதிக்கப்பட்டு முழுமையாக குணமடைந்துள்ளார் என்றால் அதிசயம் தான். இவர் தான் நாம் எதிர்காலத்திற்கு நம்பிக்கை.

104 வயதான அடா சன்சுஸ்ஸோ என்ற பாட்டி ஸ்பெயின் காய்ச்சல் மற்றும் கொரோனா காய்ச்சல் இரண்டில் இருந்துமே மீண்டுள்ளார். இவர்தான் நம்பிக்கையின் மறுவடிவம்.

Ada sunso
104 age Ada Sunsso recovered from corona

சீனாவில் 100 வயதான தாத்தா கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து நம்பிக்கை அளித்துள்ளார். மேலும் அவருக்கு ஏற்கனவே மறதி நோய் உள்ளது.

79வயதான இத்தாலியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பதிப்படைந்த பின் பரிசோதனை மருந்து அளிக்கப்பட்டது. அதில் அவரின் உடலில் முன்னேற்றம் அடைந்து குணமடைந்தார் என்பது அதிசயமே.

அதே மருந்து இன்னும் பல்வேறு நபர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

107age dutch women
107 age dutch women recovered from corona

107 வயதான டச்சு பெண்மணி கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த வயதான மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் தினமும் நன்றாக நடக்கிறாராம். இது அதிசயத்திலும் அதிசயம்.

Previous articleசித்தார்த் சூரியநாராயணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!
Next articleவிஜய்க்கு போன் செய்து சஞ்சய் பற்றி விசாரித்த தல அஜித்!
நாகேஷ்வரன் எடிட்டர், MrPuyal.com. மிஸ்டர் புயல் இணையதளத்தின் தூண் என இவரைக் குறிப்பிடலாம். இவருடைய புனைப்பெயர் ஹஸ்ட்லர். எறும்பு போன்று எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பதால் நண்பர்களால் ஹஸ்ட்லர் என அழைக்கப்படுகிறார். தொடர்புக்கு கீழுள்ள சமூக வலைதளங்களை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here