Home விளையாட்டு  தோனி மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமே – ஹர்பஜன் சிங் .

 தோனி மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமே – ஹர்பஜன் சிங் .

அவர் ஐபில் லில் தொடர்ந்து விளையாடு வார் அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும்.

225
1

 

தோனி எப்போது அணிக்கு மீண்டும் திரும்புவார் என அவரது ரசிகர்கள் மற்றும் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த கேப்டன்களில் தோனியும் ஒருவர். தோனி வென்று தராத ஐசிசி கோப்பைகளே இல்லை.

அவர் சமீபகாலமாக மிக நிதானமாக விளையாடுகிறார் என ஒருசாராரும் , இல்லவே இல்லை என்று ஒரு சாராரும் நித்தமும் ஆன்லைனில் வாக்குவாதம் நடத்திக் கொண்டு இருக்க.பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் அவரது பெயர் இடம்பெறவில்லை.

சில தினங்களுக்கு முன்னாள், ஹர்பஜனும் , ரோஹித் ஷர்மாவும் சமூக வலைத்தளம் ஒன்றில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்தனர். 

 

அப்போது ஒரு ரசிகர் “தோனி மீண்டும் எப்போது ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்பார்  என்று கேட்டார் ?”  

அதற்க்கு “ அது அவரின் முடிவு தான், ஆனால் உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக அவர் ஆடிய அரை இறுதிப் போட்டி தான் அவரது கடைசி ஒரு நாள் போட்டி என்று அவர் அறிந்திருக்க கூடும். அவர் மீண்டும் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க்க சாத்தியம் இல்லை என்றே நினைக்கிறன். அவர் ஐபில் லில் தொடர்ந்து விளையாடு வார் அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் “ என பதில் அளித்து இருக்கிறார்.

சா.ரா.

 

Previous articleகொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் முக்கிய நகரங்களுக்கு முழு ஊரடங்கு
Next articleஉத்தரப்பிரதேசம்: 13 வயது பெண் குழந்தை கூட்டு பலாத்காரம்

1 COMMENT

  1. புதிய எழுத்தாளர்களே , இந்த தளத்தில் நீங்கள் போடும் பதிவுகளுக்கு சரியான பணம் உங்களைச் சேராது.

    உங்களிடம் சொல்லாமல் சாக்கு கூறி பிடித்தம் செய்து விடுவார்கள்.

    ஏமாறாதீ்கள்… உங்கள் பொன்னான நேரத்தை இத்தகைய தளத்தில் விரையம் செய்ய வேண்டாம் …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here