Home சினிமா Jersey: ஜெர்சி தெலுங்கு திரைப்படம் ஒரு பார்வை!

Jersey: ஜெர்சி தெலுங்கு திரைப்படம் ஒரு பார்வை!

0
Jersey: ஜெர்சி தெலுங்கு திரைப்படம்

Jersey: ஜெர்சி தெலுங்கு திரைப்படம் ஒரு பார்வை! Sports Movie Rewind. Tamil Movie Review For Before Watch Online Download. OTT  Platform Movie Review.

ஸ்போர்ட்ஸும் வெற்றியும்:

ஸ்போர்ட்ஸ் என்ற ஒன்றை கதைக்களமாக கொண்டு வந்திருந்த பெறும்பாலான திரைப்படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன.

மேலும், ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களில் நிச்சயமாக மனதை உருகவைக்கும் காட்சிகள் இடம்பெற்றிருக்கும். அவற்றுக்கு நாம் நம் கண்ணில் இருந்து கண்ணீரையும் சிந்தியிருப்போம்.

தோல்வியில் இருந்தோ, ஏமாற்றத்தில் இருந்தோ, துரோகத்தில் இருந்தோ கதை புறப்பட்டு வெற்றியில் சென்றடையும் பாணியில்தான் அநேக படங்கள் இருக்கின்றன. இப்போது நாம் காணவிருக்கும் பதிவும் அப்படியான ஒரு திரைப்படத்தை பற்றியதுதான்.

ஆனால் இத்திரைப்படத்தில் மனைவி-கணவன், அப்பா-மகன் என்ற பிணைப்புகளுக்கு இடையே கிரிக்கெட் என்ற விளையாட்டை நிறுத்தி எமொஷனலாக பார்த்த அனைவரையும் கலங்கடித்த படம்தான் ‘ஜெர்சி (Jersey)‘.

2019-ல் தெலுங்கில் வெளிவந்து மீப்பெறும் வெற்றியை தன்வசமாக்கிய ஒரு திரைப்படம்தான் ஜெர்சி(jersey).

தெலுங்கில் ‘natural star’ என்ற பட்டம் பெற்ற ‘நானி‘ அவர்கள் கதாநாயகனாகவும், விக்ரம் வேதா புகழ் சாரதா ஶ்ரீநாத் அவர்கள் கதாநாயகியாகவும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

மேலும், சத்யராஜ் அவர்களும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் மட்டுமில்லாது ஹரிஷ்கலாயாண் முக்கியமான கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

ரோஹித் கம்ரா என்ற சிறுவன் இத்திரைப்படத்தின் ஆதிக்கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

கதைக்களம்:

கிரிக்கெட்டில் சாதிக்கவேண்டும் என்றிருந்த அர்ஜுன்(நானி) பின்னாளில் கிரிக்கெட்டை விட்டு தன் காதல் மனைவியுடன் கல்யாணம் குடும்பம் என்ற வாழ்வில் ஈடுபடுகிறான்.

இலஞ்சம் வாங்கியதின் காரணத்தினால் அவனிடமிருந்த அரசாங்க வேலையும் பறிபோக மீண்டும் அந்த வேலை கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்வியுடன் வக்கீலை பார்க்க அவ்வப்போது அலைந்தவாறும் இருக்கிறான்.

காதல் மனைவி சாரதாவின் சம்பாத்தியத்தில் குடும்பம் ஓடிக்கொண்டிருக்க, தன் நானியின் பிறந்தநாளுக்கு டீ-சர்ட் வாங்கித்தர பணம் வேண்டி கிரிக்கெட் மேட்ச் ஒன்றில் விளையாடுகிறான்.

அதற்குப்பின் மகன் நானிக்கு அர்ஜுன் விளையாடுவது பிடித்துப்போக நானிக்காக கிரிக்கெட்டை விளையாடி, தன்னை மீண்டும் இவ்வுலகத்திற்கு நிறுபீக்க போராடும் ஒரு தந்தையின் கதைதான், ஜெர்சி.

மேலும், அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது? அர்ஜுன் சாதித்தரா இல்லையா? போன்றவைதான் மீதிக்கதை.

மிக எளிமையாக கதையை கூறிவிட்டாலும் காட்சியாக திரைப்படம் முழுவதும் அவ்வளவு திருப்திகளை காணமுடிகிறது.

முப்பது வயதுகளில் உள்ளவர் விளையாடும்போது ஏற்படும் சங்கடங்களும் நிராகரிப்புகளையுமே இப்படம் பதிவு  செய்தியிருக்கிறது.

மகனும்-தந்தையும்:

அர்ஜுனும் மகன் நானியும் ஒன்றாக இருக்கும் ஒவ்வொரு காட்சிகளிலும் உணர்ச்சிகள் மெல்ல மெல்ல பெருக்கெடுக்கின்றன.

திரைப்படம் பார்த்த பலருக்கு இப்படியான காட்சிகளில், ‘தனக்கும்-அப்பாவுக்குமான நினைவுகளையும், நிகழ்வுகளையும், தனக்கும்-மகனுக்குமான நிகழ்வுகளையும், நினைவுகளையும்’ நிச்சயம் நியாபகப்படுத்தி சென்றிருக்கும்.

மகன்-தந்தை உறவுகளுக்கிடையேயான அடர்த்தியை சின்னச்சின்ன காட்சிகளில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார், இயக்குனர்.

காதல் காட்சிகள் திரைப்படத்தில் அதிகமாக இல்லையென்றாலும், சாரதா செய்யும் செயல்களுக்கு பின்னாலிருக்கும் அன்பை, படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக புரியும்.

சாரதா-அர்ஜீன்-நானி போன்றோருக்கு இடையேயான உரையாடல்கள் பரிமாறல்கள் என அனைத்திலும் எமொஷனல் கணெக்டை நாம் உணரலாம். ஆனால் அந்த எமொஷனல்கள்  தீணிக்கப்பட்டிருக்காது அதுவாகவே நிகழ்ந்திருக்கும்.

நானி எனும் நடிகன்:

அர்ஜீனாக நடிகர் நானியின் நடிப்பில் அவ்வளவு தெளிவு. நானியின் ஃபிலிமோகிராபில் நிச்சயம் ஜெர்சி திரைப்படம் மீப்பெறும் மைல்கல்லாக என்றைக்கும் இருக்கும்.

பல காட்சிகளில் தன் மெளனங்களாலும், நடிப்பாலும் திரைப்படத்தை உயர்த்தியிருக்கிறார்.

ஒரு முக்கியமான காட்சியில் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று தனது சந்தோஷத்தை ஒரு சாதிப்பு வெறியை கத்துதல் மூலம் வெளிப்படுத்தியிருப்பார்.

அந்தக்காட்சியை கண்டு பலர் நெகிழ்ந்திருப்பதாக பல சமூகவலைதளங்களில் இன்றளவும் பதிவிட்டு வருகின்றனர்.

இசையமைப்பு:

அனிருத் அவர்கள்தான் இத்திரைப்படத்தின் இசையமைப்பாளர். மிகவும் பொறுப்புடனும் அதே சமயம் எல்லையை மீறிப்போகாமலும் படத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்தியிருக்கிறார். காட்சிகள் பெறும்பாலும் நம்முடன் கணெக்ட் செய்வதற்கு இசை மீப்பெறும் பங்காற்றியிருக்கிறது.

இத்திரைப்படத்தை பார்க்காதவர்கள் பார்க்கலாம். நிச்சயம் ஏமாற்றம் நிகழ வாய்ப்பிருக்காது. மேலும் இன்றுடன் இத்திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை கடக்கிறதென்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version