Home சினிமா National award winning tamil movie: வாகை சூட வா திரைவிமர்சனம் | vaagai sooda...

National award winning tamil movie: வாகை சூட வா திரைவிமர்சனம் | vaagai sooda vaa Movie Review

வாகை சூட வா

0

National award winning tamil movie: வாகை சூட வா திரைவிமர்சனம் | vaagai sooda vaa Movie Review. நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.

என்றுமே  தமிழ் சினிமாவில் மண் சார்ந்த , வாழ்வியல் சார்ந்த , எதார்த்தம் நிறைந்த திரைப்படங்களுக்கு மரியாதையும் மவுசும் உண்டு . அந்த வகையில் இந்தப்படமும் மதிக்கத்தக்க ஒரு தரமான , தேசிய விருதுப் பெற்ற சிறந்த திரைப்படம்.

சற்குணம் என்கிற எதார்த்தப் படைப்பாளியின் சமரசமற்ற கிராமிய படைப்பு , இப்படத்தின்  மூலமே இனியா என்கிற நல்ல நடிகையும் , ஜிப்ரான் என்கிற திறமையான இசை அமைப்பாளரும் அறிமுகம் ஆகினர் .

அண்ணாமலை என்பவர் பத்திரம் எழுதும் வேலை செய்பவர் , அவரின் மகனான வேலுத்தம்பியை எப்படியாவது அரசாங்க வேலையில் அமர்த்திவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார். 

கிராம சேவா என்கிற அமைப்பு கிராமங்களில் இருக்கும் சிறுவறுகளுக்கு ஆறு மாத காலம் பாடம் சொல்லித்தருபவருக்கு ஊக்க ஊதியமும் , ஆறுமாத நிறைவில் ஒரு சான்றிதழும் வழங்கும்.

அந்தச் சான்றிதழ் அரசாங்க ஆசிரியர் ஆக உதவும். இதை அறிந்த அண்ணாமலை தனது மகனை எழுத்தறிவே இல்லாத வறுமையில் வாடும், செங்கல் செய்யும் குக்கிராமத்திற்கு அனுப்புகிறார்.

அங்கோ  யாருமே படிக்க முன்வரவில்லை , சிறுவர்களோ வேலைக்கு செல்லவே விரும்புகின்றனர் , ஊரோ வேலுத்தம்பியை வெறுக்கிறது, ஏளனமாக பார்க்கிறது.

அங்கு டீக்கடை  வைத்திருக்கும் மதியும் அவனிடம் காசு வாங்கிக்கொண்டு சாப்பாடு தராமல் ஏமாற்றுகிறார். அவளின் தந்தையோ அவனிடம் அர்த்தமற்ற புதிர் கணக்குகளை கேட்டு வெறுப்பேற்றுகிறார்… எப்படியாவது ஆறுமாதத்திற்கு சமாளித்துவிட்டு ஓடி விடலாம் என்று நினைக்கிறான் நாயகன்.

ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவர்களின் நிலையைக்கண்டு மனம் மாறுகிறான், முடிந்த அளவு கற்றுத்தருகிறான். மதியோ இவனை ஒருதலையாய் காதலிக்க துவங்குகிறாள்.

ஆறுமாதம் நெருங்கும் வேளையில் , அந்த ஊரின் முதலாளி ஜேபி இத்தனை நாள் கணக்கறிவு , எழுத்தறிவு இல்லாததால் தான் அந்த ஊரையே அடிமைப் படுத்தி வைத்ததை அறிந்து படிப்பின் அருமையை உணறுகின்றனர் .

நாயகனும்  அவர்களுக்காகவே கிடைத்த அரசாங்க வேலையை உதறுகிறான் .

அண்ணாமலையாக பாக்யராஜ் மிக சிறப்பாகவே நடித்துள்ளார் , இறுதிக்காட்சிகளில்  அரசாங்க விதிமுறைகளை விளக்குவது மிக அருமை.

வேலுத்தம்பியாக விமல், இது தான் அவரின் சிறந்த நடிப்பு. கதாப்பாத்திரத்தை உணர்ந்து சற்றும் மிகை இல்லாமல் , நம்மை சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைக்கிறார்.

அறிமுக நாயகி இனியா , மதியாகவே மாறியுள்ளார் , அவரின் பாவனைகள் மிகவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது .

தம்பி ராமையா தனக்கு அளிக்கப்பட்ட குழப்பவாதி வேலையை சிறப்பாகவே செய்துள்ளார் .

கதையின் காலம் , களம் , பின்னணி  இசை , ஒளிப்பதிவு , பாடல்கள் என அனைத்துமே அழகாய் அமைந்தப்படம் இது.

மீண்டும் இது போல சற்குணம் எப்போது படம் எடுப்பார்? விமல் எப்போது இனி இது போல் நடிக்கப்போகிறார்? கடவுளுக்கே வெளிச்சம் .

இப்படமும் நம் தமிழ் சினிமாவின் கௌரவம்!

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version