Home நிகழ்வுகள் தமிழகம் ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்குமா? வானிலை மையம் தகவல்

ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்குமா? வானிலை மையம் தகவல்

606
0

ஆம்பன் புயல் தமிழகத்தை தாக்குமா? வானிலை மையம் தகவல். வங்ககடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக உருவாகியுள்ளது.

இந்திய வானிலை மையம்:

இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வங்க கடலில்  நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி , இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்று அறிவித்துள்ளது .

ஆம்பன் புயல்:

தற்போது உருவாக உள்ள புயலுக்கு  ஆம்பன் என்று பெயரிடப்பட்டுள்ளது. மேற்கண்ட ஆம்பன் புயலானது இன்று மாலை தொடங்கி நாளை வரை வடமேற்கு திசை நோக்கி நகரும்.

அதன்பின் வடகிழக்கு  திசையில் நகர்ந்து சென்று வருகிற 20  தேதி மேற்கு வங்க அல்லது வங்கதேச கடற்கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது .

கனமழை:

மேலும் ஆம்பன்புயல் காரணமாக வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழையும் கேரளா கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் மழை சாரலும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல ஏற்கனவே தடை விதிக்க பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தில் பாதிப்பில்லை:

இருப்பினும் தமிழகத்தில் நேரடியாக எந்த மழையும் இருக்காது என்றும் கடலோர மண்டலங்களில் வெப்பநிலை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது

Previous articleவாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது ஏன்: விளக்கம் கொடுத்த ஷில்பா ஷெட்டி!
Next article9 மாவட்டங்களை கொரோனா அற்ற மாவட்டங்களாக அறிவித்த மத்திய பிரதேசம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here