Home நிகழ்வுகள் இந்தியா 9 மாவட்டங்களை கொரோனா அற்ற மாவட்டங்களாக அறிவித்த மத்திய பிரதேசம்

9 மாவட்டங்களை கொரோனா அற்ற மாவட்டங்களாக அறிவித்த மத்திய பிரதேசம்

கொரோனா அற்ற மாவட்டங்களாக

போபால்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 9 மாவட்டங்களை தற்போது கொரோனா அற்ற மாவட்டங்களாக அறிவித்த மத்திய பிரதேசம்.

கொரோனா தொற்றில்லா மாவட்டங்கள்

பர்வானி, அகர்-மால்வா, ஷாஜாபூர், ஷியோபூர், அலிராஜ்பூர், ஹர்டா, ஷாஹ்டால், டிகாம்கார்ஹ் மற்றும் பெடுல் ஆகிய மாவட்டங்கள் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு விட்டதாக கூடுதல் தலைமை செயலர்(சுகாதாரம்) மொகமத் சுலைமான் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பை வெள்ளிகிழமை நடந்த மதிப்பாய்வு கூட்டத்தில் தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில், மேலே குறிப்பிட்ட மாவட்டங்களில் 8 இல் இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என சுலைமான் தெரிவித்தார்.

பரிசோதனைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வெள்ளி கிழமை மட்டும் 5,822 இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது எனவும், 93,849 மாதிரிகள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை 4,595 கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மற்றும் இதில் 45% பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும் வெள்ளிகிழமை அவர் தெரிவித்தார்.

சில மாவட்டங்களில் இடம்பெயர்ந்த தொழிளார்களின் வருகையால் புதிய கொரோனா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா

தாமோஹ் மாவட்டத்தில் மும்பையில் இருந்து வந்த இடம்பெயர்ந்த தொழிலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, இது அந்த மாவட்டத்தில் ஏற்பட்ட முதல் தொற்றாகும்.

வெள்ளி மாலை வரை மொத்தம் 239 பேர் கொரோனா பாதிப்பால் மத்திய பிரதேசத்தில் இறந்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version