Home நிகழ்வுகள் இந்தியா கலைஞர் சதீஷ் குர்ஜால் தனது 94 வயதில் இயற்கை எய்தினார்

கலைஞர் சதீஷ் குர்ஜால் தனது 94 வயதில் இயற்கை எய்தினார்

0
கலைஞர் சதீஷ் குர்ஜால்

கலைஞர் சதீஷ் குர்ஜால் தனது 94 வயதில் இயற்கை எய்தினார், ஓவிய சிற்ப சுவர் சித்திர கட்டிட கலைஞர் சதிஷ் குர்ஜால்.

இந்தியாவில் மிகவும் பிரபலமான பத்ம விபூஷண் விருது பெற்ற கலைஞர் குர்ஜால் 94 வயதில் நேற்று மாலை காலமானார்.

சதீஷ் குர்ஜால் பல்வேறு கலைகளில் வல்லுநராக இருந்தவர். அவை சுவர் சித்திரம், ஓவியம், கட்டிட கலைஞர், சிற்பி மற்றும் கவிதை காதலன்.

அவருக்கு கலைகளின் மீது ஈர்ப்பு வந்ததற்கு பாய்ஸ் அஹமது பாய்ஸ் மற்றும் கலிப் ஆகிய இருவரின் கவிதை படைப்புகளே காரணமாம்.

1925ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் பிறந்தார். அவர் பிறந்த காலங்களில் நம் சுதந்திர போராட்ட காலங்களில் அதிக பிரச்சனைகளை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

பிறகு சிம்லாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் அவருக்கு ஓவியத்தின் மீது காதல் வந்தது. மனிதனுக்கு மனிதன் மீது இருக்கும் வெறுப்பை ஓவியமாக வரைந்தார்.

1950ஆம் ஆண்டுகளில் மெக்சிகன் சுவர் ஓவியரான டேவிட் சிகுரோஸ் மற்றும் டியாகோ ரிவேரா ஆகிய இருவரிடம் உதவியாக பணி புரிந்தது இவருக்கு கலை கற்க ஏதுவாக அமைந்தது.

கலைரீதியாகவும் விமர்சனரீதியாகவும் இந்தியா முழுவதும் புகழ்பெற்ற சதீஷ் குர்ஜால் இயற்கை ஒரு சகாப்தத்தை விட்டு சென்றுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version