Home நிகழ்வுகள் இந்தியா கோடீஸ்வர தொழில் அதிபர்களின் ரூ.68,607 கோடி கடன் தள்ளுபடி, இந்திய வங்கிகள்

கோடீஸ்வர தொழில் அதிபர்களின் ரூ.68,607 கோடி கடன் தள்ளுபடி, இந்திய வங்கிகள்

0
கோடீஸ்வர தொழில்

மும்பை: இந்திய வங்கிகள் 50 கோடீஸ்வர தொழில் அதிபர்களிடமிருந்து வாராக்கடனாக தேங்கி நின்ற சுமார் ரூ.68,607 கோடி கடன் தள்ளுபடி செய்துள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின்(RTI) வாயிலாக அறியப்பட்டுள்ளது.

மோசடியில் சிக்கி தப்பித்த தொழில் அதிபர்களும் அடங்குவர்

இதில் இந்தியாவை விட்டு தப்பிச்சென்ற வைர வியாபாரி நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் மெகுல் சோக்க்ஷி போன்றோரும் அடங்குவர்.

பிரபல பொதுநல வழக்கு தொடுப்பாளர் சாகெட் கோகலே என்பவர் தொடுத்த பொதுநல வழக்கின் வாயிலாக இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதை பற்றி அவர் கூறுகையில், ” பிப்ரவரி 16ல் பாராளுமன்றத்தில் இராகுல் காந்தி இதைப்பற்றி கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நிதி இணை அமைச்சர் அனுராக் தாகூர் ஆகியோர் பதில் அளிக்க மறுத்தமையால் தான் இந்த பொது நல வழக்கை தொடுத்தேன்’, என கோகலே தெரிவித்துள்ளார்.

மெகுல் சோக்க்ஷி , விஜய் மல்லையா

இந்த பட்டியலில் மெகுல் சோக்க்ஷியின் மோசடி கம்பெனியான கீதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடட், ரூ. 5,492 கோடி கடன் தள்ளுபடி பெற்று முதலிடத்தில் உள்ளது, மேலும் கிலி இந்தியா நிறுவனம் மற்றும் நக்சத்ரா பிராண்ட்ஸ் நிறுவனம் ஆகியவை முறையே 1,477 கோடி மற்றும் 1,109 கோடி என தெரிவிக்கப்பட்ளுள்ளது. மேலும் பிரபல விஜய்மல்லையா வின் கிங்க்பிஷ்சர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ரூ.1,943 கோடி கடனும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சோக்க்ஷி தற்போது ஆன்டிகுவா மற்றும் பர்படாஸ் இஸெல்ஸ் ஆகிய நாடுகளின் குடியுரிமையை பெற்றுள்ளார் மேலும் மற்றொரு மோசடி தொழில் அதிபரும், சோக்ஷியின் சொந்தகாரரும் மற்றும் வைர வியாபாரியுமான நீரவ் மோடி தற்போது இலண்டனில் உள்ளார்.

இந்த 50 தொழிலதிபர்களின் தொழில்களில் 6 தங்கம் மற்றும் வைரம் சம்பந்தப்பட்டவை ஆகும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version