Home நிகழ்வுகள் இந்தியா மக்கள் வெளியில் வந்தால்; கண்டவுடன் சுட முதல்வர் உத்தரவு

மக்கள் வெளியில் வந்தால்; கண்டவுடன் சுட முதல்வர் உத்தரவு

0
முதல்வர் உத்தரவு லாக்டவுன் கொரோனா வைரஸ்

தெலுங்கான மாநிலத்தில் லாக்டவுன் உத்தரவை மதிக்காமல் வெளியில் வரும் பெதுமக்களை கண்டவுடன் சுட முதல்வர் உத்தரவு பிறபிக்கப்போவதாக எச்சரித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்ப பட்டு உள்ளது. இதே போல் தெலுங்கான மாநிலம் முழுவதும் லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அரசு உத்தரவை மீறி பலர் வெளியில் நடமாடி வருகின்றனர். இதனால் முதல்வர் சந்திரசேகர் ராவ் எரிச்சல் அடைந்துள்ளார்.

வெளியில் வரும் பொதுமக்கள் கொரோனாவின் தீவிரம் தெரியாமல் நடமாடி வருகின்றனர். நிலை இப்படியே சென்றால் மாநில கட்டுபாட்டை ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ராணுவம் உள்ளே வந்தால் கண்டவுடன் சுட உத்தரவு கொடுக்கப்படும் எனவும் தெலுங்கானா மக்களை எச்சரித்துள்ளார்.

தெலுங்கான மாநிலத்தில் இதுவரை அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் மட்டுமே கொரோன தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்குள்ள கவுன்சிலர்கள் பலர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். பணிக்கு ஒழுங்காக வருவதில்லை. இதுகுறித்து முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்க உள்ளார்? என ஊடங்கங்கள் கேள்வி எழுப்பி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version