Home நிகழ்வுகள் இந்தியா கேரளாவில் புதிதாக இரண்டு கொரோனா தொற்று, மருத்துவமனைகள் தயார்: பினராயி விஜயன்

கேரளாவில் புதிதாக இரண்டு கொரோனா தொற்று, மருத்துவமனைகள் தயார்: பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: கேரளாவில் புதிதாக இரண்டு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சனிக்கிழமை தெரிவித்தார். பாதிக்கப்பட்ட இருவரும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து மே 7 ஆம் தேதி விமானம் மூலம் கேரளா வந்தவர்கள் என தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்

“ஒருவர் துபாயிலிருந்து கோழிக்கோடு வந்தவர், மற்றொருவர் அபுதாபியிலிருந்து கொச்சி வந்தவர் .” என அவர் தெரிவித்தார். மேலும் கேரளாவில் தற்போது மொத்தம் 505 கொரோனா பாதிப்புகளில் 17 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேலும் முதல்வர் தெரிவிக்கையில் 23,596 பேர் கண்கானிப்பில் உள்ளதாகவும், மற்றும் 334 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் வெளிநாடுகளில் இருந்து கேரளாவாசிகள் இன்னும் அதிகம் பேர் வர இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகளுடன் நாங்கள் தயாராக உள்ளோம் எனவும். “நாங்கள் 207 அரசு மருத்துவமனைகள் மற்றும் 125 தனியார் மருத்துவமனைகளையும், 27 மருத்துவமனைகளை முழுநேர கோவிட்-19 மருத்துவமனைகளாக மாற்றம் செய்யவும் தயார் நிலையில் இருப்பதாகவும். எந்த நாடும் இதுவரை முழுமையாக கொரோனா தொற்றில் இருந்து விடுபடவில்லை,” என கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கொரோனாவை சிறப்பாக கட்டுபடுத்தும் மாநிலம்

இந்தியாவிலேயே கொரோனாவை சிறப்பாக கட்டுக்குள் வைத்துள்ள மாநிலம் கேரளா ஆகும். எனவே எதிர்வரும் நாட்களிலும் சிறப்பாக செயலாற்றி கொரோனாவை கட்டுபடுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version