Home நிகழ்வுகள் தமிழகம் தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது

0
வானிலை அறிக்கை

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில் 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டியது, தமிழகத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி பேரன்ஹிட்டை வரை வெயில் அடித்துள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை கொதிக்கும் அளவிற்கு வெப்பத்தை சூரியன் காக்கி வருகிறது.

அந்த நேரங்களில் வெளியில் செல்வதற்கே அச்சத்தை உண்டு பண்ணுகிறது. தமிழகத்தில் 9 இடங்களில் சனிக்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி பதிவானது.

அதிகபட்சமாக, திருத்தணியில் 106 டிகிரியும், திருச்சியில் 105 டிகிரியும், கரூா் பரமத்தி, சேலம், வேலூரில் தலா 104 டிகிரியும் அடித்துள்ளது.

மேலும் தருமபுரி, நாமக்கல், மதுரை விமானநிலையத்தில் தலா 102 டிகிரியும், சென்னை மீனம்பாக்கத்தில் தலா 100 டிகிரியும் வெப்பநிலை பதிவானது.

இன்று லேசான மழை மற்றும் 96 டிகிரி வரை வெப்பநிலை பதிவாவதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version