Home நிகழ்வுகள் உலகம் புரேவி புயல் திரிகோணமலை, கன்னியாகுமரி பகுதியை தாக்கும்

புரேவி புயல் திரிகோணமலை, கன்னியாகுமரி பகுதியை தாக்கும்

0
cyclone burevi puyal புரேவி புயல்

புரேவி புயல் (cyclone burevi puyal) (burevi live updates) திரிகோணமலை, கன்னியாகுமரி பகுதியைத் தாக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

திரிகோண மலையில் இருந்து 530 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டு உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக மாற உள்ளது.

இதற்கு புரேவி புயல் (cyclone burevi) என்று தான் பெயர் வைக்கப்பட வாய்ப்பு உள்ளது. cyclone burevi name meaning புரேவி புயல் பெயர் வந்தது எப்படி?

இந்த புயல், இலங்கை திரிகோண மலை வழியாக கன்னியாகுமரி நோக்கி வரும்.

புரேவிபுயல் (burevi puyal), இலங்கைகுள் நுழைந்தாலும் கன்னியாகுமரி வரை வழுவுடன் சென்று தாக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதுகாப்பு குழு கன்னியாகுமரி சென்று உள்ளது. அரண் அமைக்க 2000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புரேவிபுயல் காரணமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், சிவகாசி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யக்கூடம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடலிற்குள் மீன் பிடிக்கச்சென்ற மீனவர்கள் கரை திரும்புமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 2018-ஆம் ஆண்டு ஒக்கி புயல் இதே கன்னியாகுமரி பகுதில் பல மீனவர்களின் உயிரை காவு வாங்கியது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version