Home நிகழ்வுகள் உலகம் வரிசையில் நின்று பர்கர் வாங்கிய பில்கேட்ஸ்

வரிசையில் நின்று பர்கர் வாங்கிய பில்கேட்ஸ்

0
வரிசையில் நின்று

வரிசையில் நின்று பர்கர் வாங்கிய பில்கேட்ஸ். புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பில் கேட்ஸ். இவர், பர்கர் வாங்குவதற்காக வரிசையில் நின்ற புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 63 வயதான பில் கேட்ஸ், 95 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெறும் 8 டாலர் மதிப்புள்ள பர்கர் வாங்க சிவப்பு சொட்டர், க்ரே பேண்ட் அணிந்து சியாட்டில் (seattle) என்ற நகரில் உள்ள டிக்ஸ் ட்ரைவ் (dick’s drive) கடை முன்னே வரிசையில் நின்றுள்ளார்.

இந்தப் புகைப்படமானது முதலில் மைக்ரோசாப்ட் பேஸ்புக் குரூப்பில் போஸ்ட் செய்யப்பட்டது. இதுவரை 15000 லைக்குகளும் 12000 சேர்களும்  செய்யப்பட்டுள்ளன.

மற்ற பணக்கார பிரபலங்கள் போல் இல்லாமல், நிஜவாழ்க்கையில் எளிமையை விரும்புபவர் பில் கேட்ஸ் ஆவார்.

இவருடைய எளிமையால் இப்புகைப்படம் பயங்கரமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version