2020 இந்தியா வல்லரசு நாடாக முன்னேற கொரோனா வைரஸ் எப்படி உதவும்? சீனா மீது உலக நாடுகள் முற்றிலும் உறவை முறித்துக்கொள்ளும் போது இந்தியா வல்லரசாக மாற வாய்ப்பு.
கொரோனா அச்சுறத்தல்
உலகத்தையே தற்போது வீட்டில் முடங்க செய்துவிட்டது இந்த கொரோனா எனும் கொடிய வைரஸ். இந்த வைரஸினை தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு ஊசியினை கண்டுபிடிப்பதில் உலகில் உள்ள பல நாடுகள் விடாமல் முயற்சித்து வருகின்றன.
பல நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்த இந்த வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது.
இந்தியாவில் டெல்லி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அதிகமாக பரவியுள்ள இந்த வைரஸால், 21 நாட்கள் இருந்த ஊரடங்கு தற்போது மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த பல கடுமையான முயற்சிகளை எடுத்து வரும் இந்திய அரசிற்கு, பல உலக நாடுகள் பாராட்டு தெரிவிக்கும் வேலையில் ஒரு சில ஆய்வாளர்கள் இந்தியாவில் இந்த வைரஸினால் ஏற்படப்போகும் மாற்றங்களையும் கணித்து வருகின்றனர்.
உலகில் உள்ள பல நாடுகளின் பொருளாதாரத்தை பாதித்த இந்த வைரஸ், இந்தியாவின் பொருளாதாரத்தில் சுணுக்கத்தை மட்டுமே ஏற்படுத்தும் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பொருளாதார சுணுக்கத்தில் இருந்து இந்தியா மீண்டு வரவும், அப்துல்கலாம் கண்ட 2020 இந்தியா வல்லரசு கனவும் பலிப்பதற்காக ஒரு சில வழிகள் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து எப்படி வந்தது என்று இன்றுவரை தெரியப்படாத இவ்வேளையில், கொரோனாவிலிருந்து மீண்ட சீனா இந்த சூழ்நிலையை பல வழிகளில் தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது.
இந்த செயலினால் பல நாடுகள் சீனாவினை ஒத்திவைக்க இருப்பதாக பல பேச்சுக்கள் உள்ளன. கூடியவிரைவில் அது நடக்க வாய்ப்பு இருப்பதாக பலர் கூறுகின்றனர்.
உலகில் பல நாடுகளின் வணிகம் மற்றும் பொருளாதாரம் சீனாவின் பெரும்பங்கில் உள்ளது. அப்படி அவர்கள் சீனாவினை ஒதுக்க முடிவெடுத்தால் இதற்கான மாற்றுவழியினை அவர்கள் தேடியே ஆக வேண்டும்.
india superpower 2020
சீனாவிற்கு அடுத்தபடியாக அவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இந்தியா தான். ஒருவேளை பல நாடுகள் இந்தியாவிடம் வணிகத்தையோ அல்லது பொருளாதாரம் சார்ந்த விஷயங்களுக்கு இந்தியாவினை நாட வாய்ப்புள்ளது.
இந்த வாய்ப்பினை இந்தியா சரியாகப் பயன்படுத்தினால், உலகின் பல நாடுகளுடன் வணிகம் செய்து பொருளாதாரத்தை எளிதாக மேம்படுத்திக்கொள்ள முடிவதோடு மட்டுமல்லாமல் வேலையில்லாத் திண்டாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க வாய்ப்புள்ளது.
அப்துல் கலாமின் ஆசையை நிறைவேற்றுமா கொரோனா?
இந்தியாவிற்கு அப்படியொரு வாய்ப்பு கிட்டி இந்திய அரசு அதனைச் சரியாக பயன்படுத்தினால், அறிவியல் மேதையான டாக்டர் அப்துல்கலாமின் 2020 இந்திய வல்லரசு கனவு பலிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.