Best Answer
உலகின் ஒளி என்று அழைக்கப்பட்டவர் நூர்ஜஹான். அக்பரின் முதல் மகன் ஜஹாங்கிர். இவர் நான்காவது மொகலாய அரசர். இவரின் கடைசி மனைவி நூர்ஜஹான். நூர்ஜஹானுக்கு ஜஹாங்கிர், இரண்டாவது கணவர்.
ஈரானில் இருந்த காந்தஹாரில் வசதியான பெர்சியக் குடும்பத்தில் பிறந்து, இந்தியாவில் குடியேறியவர் நூர்ஜஹான். பூர்விகப் பெயர் மெஹருன்னிசா. அவருடைய தந்தை மிர்சா கியாஸ் பேக் இலக்கியவாதி, பேரரசர் அக்பரின் அமைச்சர்.
அதனால், மெஹருன்னிசாவுக்கும் உயர்ந்த கல்வியை வழங்கினார். பெர்சிய ராணுவ வீரரும் பிகார் பகுதி ஆளுநருமான ஷேர் ஆப்கனை 17 வயதில் மெஹருன்னிசா திருமணம் செய்துகொண்டார்.
ஷேர் ஆப்கன், அரசரின் எதிரிகளுக்கு நெருக்கமானபோது கொல்லப்பட்டார். கணவரை இழந்த பின் அரண்மனை பணிப்பெண்களில் ஒருவரானார் மெஹருன்னிசா.
அவருடைய அழகால் ஈர்க்கப்பட்ட ஜஹாங்கிர், விரைவிலேயே தன் மனைவியாக்கிக் கொண்டார். ஆரம்பத்தில் நூர் மகால் என்றழைக்கப்பட்ட மெஹருன்னிசா, ‘உலகின் ஒளி’ என்று பொருள்படும் வகையில் நூர் ஜஹான் என்ற பெயரைப் பெற்றார்.
Please login or Register to submit your answer