உலகின் அசிங்கமான பெண் யார்? ஏன் அப்படி அழைக்கப்படுகிறார்?

0
Questions & Answersஉலகின் அசிங்கமான பெண் யார்? ஏன் அப்படி அழைக்கப்படுகிறார்?
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulagin asingamana pen yaar? yen appadi azhaikkappadukirar?

1 Answers

Best Answer

Uma Staff answered 4 வருடங்கள் ago
  உலகின் அசிங்கமான பெண்  லிஸி வேலஸ்க்யூ ஸுக்கு  
  அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த லிஸி வேலஸ்க்யூ ஸுக்கு அப்போது 17 வயது. ஒரு தடவை ஆன்-லைனில் மெயில் செக் செய்துகொண்டிருந்தபோது, ‘The World’s Ugliest Woman’ (உலகின் அசிங்கமான பெண்மணி) என்ற தலைப்பில் தனது இன்பாக்ஸுக்கு வந்த ஒரு வீடியோ லிங்க்கை க்ளிக் செய்த லிஸிக்குப் பேரதிர்ச்சி. காரணம் – உலகின் அந்த அசிங்கமான பெண்மணி தான்தான் என்று அப்போதுதான் அவருக்குத் தெரிந்தது.
அவரது ஒவ்வொரு நடவடிக்கைகளையும், அவருக்கு இருக்கும் நோய்களையும் விவரமாகப் படம்பிடித்து அந்தத் தலைப்பில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்கள் சில விஷமிகள். இதில் கொடுமை என்னவென்றால், அந்த வீடியோவுக்கு வந்த கமென்ட்டுகள் கொடூர ரகத்தைச் சேர்ந்தவை.
 
‘இவளைப் பார்ப்பதற்கு நான் குருடாகவே இருந்துவிடுவேன்!’ 
 
‘இன்னுமா இவளை பெற்றோர் உயிருடன் வைத்திருக்கிறார்கள்?’
 
‘இவளை நெருப்பில் எரித்துவிடலாம்!’
 
‘இவள் தற்கொலை செய்து கொள்வதுதான் நாட்டுக்கு நல்லது!’
 
– என்று இரக்கமே இல்லாமல் வந்திருந்த கமென்ட்டுகளைப் படித்துவிட்டு, பல வருடங்கள் தூங்காமல் அழுது புரண்டார் லிஸி.
வலது கண்ணில் சுத்தமாகப் பார்வை கிடையாது இடது காது அறவே கேட்காது  எலும்புகளின் அடர்த்தி மிகவும் குறைவு  எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாது  வலது கால் அடிக்கடி வளைந்து, எலும்பு முறிவு ஆகும் அபாயம் என்று பெயர் தெரியா நோய்களுக்கு நடுவில் வாழ்ந்து வரும் லிஸிக்கு, இப்போது வயது 26. எடை 27 கிலோ மட்டுமே.