உலக ஒற்றுமை பற்றி கவிதை வாயில் விளக்கம் தருக

0
Questions & Answersஉலக ஒற்றுமை பற்றி கவிதை வாயில் விளக்கம் தருக
mrpuyal Staff asked 4 வருடங்கள் ago
ulaga otrumai patri kavithai vaayil vilakkam tharuga

1 Answers
Uma Staff answered 4 வருடங்கள் ago

ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.

தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு

சம்பாத்யம் இவையுண்டு தானுண் டென்போன்

சின்னதொரு கடுகுபோல் உள்ளங் கொண்டோன்

தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்!

கன்னலடா என்சிற்றூர் என்போ னுள்ளம்

கடுகுக்கு நேர்மூத்த துவரை யுள்ளம்!

தென்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்

சுதந்தரத்தால் பிறநாட்டைத் துன்பு றுத்தல்!

ஆயுதங்கள் பரிகரிப்பார், அமைதி காப்பார்,

அவரவர்தம் வீடுநகர் நாடு காக்க

வாயடியும் கையடியும் வளரச் செய்வார்!

மாம்பிஞ்சி யுள்ளத்தின் பயனும் கண்டோம்!

தூயஉள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம்

தொல்லுலக மக்களெலாம் யுஒன்றேரு என்னும்

தாயுள்ளம் தனிலன்றோ இன்பம்! ஆங்கே

சண்டையில்லை தன்னலந்தான் தீர்ந்த தாலே.