Home Questions தீபாவளி என்றால் என்ன? (தீபாவளி வரலாறு)

தீபாவளி என்றால் என்ன? (தீபாவளி வரலாறு)

225
0
Questions & AnswersCategory: Questionsதீபாவளி என்றால் என்ன? (தீபாவளி வரலாறு)
mrpuyal Staff asked 3 வருடங்கள் ago
தீபாவளி என்றால் என்ன? (தீபாவளி வரலாறு)

1 Answers

Best Answer

arivu mathi Staff answered 3 வருடங்கள் ago
        தீபாவளி வரலாறு:
                புராணக் கதைகளின் படி,  திருமால் வராக அவதாரம் (காட்டு பன்றி) எடுத்திருந்தபோது அவரது இரு மனைவியருள் ஒருவரான, நிலமகளான (பூமாதேவிக்கு) பிறந்த மகன் பவுமன் என்ற பெயரில் பிறந்தான். (பவுமன் என்றால் அதிக பலம் பொருந்தியவன் அல்லது பலமானவன் என்று அர்த்தம்) பின்பு அவன் இன்றைய அசாம் மாகாணத்தில் உள்ள பிராக்ஜோதிசா என்னும் நாட்டை ஆண்டு கொண்டு இருந்தான்.
                    பின்பு ,தனக்கு யாராளும் மரணம் நேர கூடாதென்று பிரம்மனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அப்போது அவன் முன் காட்சியளித்த பிரம்மன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டபோது எனக்கு எந்த நிலையிலும் மரணம் ஏற்படகூடாதென்று வரம் கேட்டான், 
                          அப்போது, பிரம்மன் இவ்வுலகில் பிறக்கும் உயிர்கள்யாவும் ஒரு நாள் இறந்தே தீரும் என்றார் பிரம்மன். பின்பு நரகாசுரன்” என் தாயால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் “வாங்கினான்.
                 பின்பு ,மனிதன் ஆக இருந்து ஒரு அசுரன் ஆக மாறியதால், அவனுக்கு நரகாசுரன் என்று பெயர் ஏற்பட்டது (நர+மனிதன் சூரன்+அசுரன்) என்பதன் சுருக்கமே நரகாசுரன் ஆகும். இவன் கடவுள்களின் அன்னையாகக் கருதப்படும் அதிதியின் காது வளையங்களை திருடியும், ஏராளமான பெண்களை சிறை பிடித்தும் துன்புறுத்தி வந்தான்.
 
                   அப்போது,கிருஷ்ணர் அவதாரத்திற்க்கு முன்பே திருமால் வராக அவதாரம் எடுத்திருந்தார். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருஷ்ணன் தனது மனைவியில் ஒருவரான ச‌‌த்‌தியபாமா‌ (பூமாதேவியின்) அவதாரமாவார்.
                      அவருடன் சென்று நரகாசுரனை அழிக்க பல வகையில் முயற்சித்த கிருஷ்ணர் தனது மனைவி சத்யபாமாவை நரகாசுரன் முன்பு ஒரு பேரழகியாக அலங்கரித்து ஒரு நாட்டிய நடனம் நடத்தினான்.
                       அதில்,கிருஷ்ணர்-சத்யபாமாவை சாட்டையால் அடித்து ஒரு அடிமை நாட்டியம் ஆட வைக்கின்றான். இந்த நடனத்தின் முடிவில், நரகாசுரன் தனது இறப்பு நெருங்கியது கண்டு அச்சமுற்றாலும், நரகாசுரன் ஒரு அம்பை, கிருஷ்ணரை பார்த்து விட்ட போதிலும் அந்த அம்பை தனது கணவன் மீது படாமல் நாட்டியம் ஆடும் அழகியான சத்யபாமா தன் நெஞ்சில் வாங்கி கொள்கிறாள்.
                   அந்த, அம்பு நெஞ்சில் விழுந்த வலியயை கூட பொருட்படுத்தாமல் தன் நெஞ்சில் இருந்து எடுத்து நரகாசுரனை சத்யபாமா கையால் அழிக்க வைத்தான் கிருஷ்ணர் என்றும் கிருஷ்ணர் தனது திறமையால் அந்த நரகாசுரனை இறக்க வைக்கிறான் என்று கூறப்படுகின்றது.
               இந்த நரகாசுரனின் வதத்தை மகாபாரதத்தில்  சிவந்தமண்களம்  . அதாவது ,  சிவந்த(இரத்தம்)+மண்(பூமி)+களம்(போர்புரியும்இடம்)} என குறிப்பிடப்பட்டுள்ளது.
              பின்னர்,கிருஷ்ணர், நரகாசுரன் பிடியில் இருந்த அனைத்துப் பெண்களையும், அதிதியின் காது வளையங்களையும் மீட்டு தேவர்களிடம் ஒப்படைத்தார்.
          நரகாசுரனை  அதிகாலையில்வதம் செய்து முடித்த முவகிருஷ்ண பகவான், எண்ணை தேய்த்து தலை முழுகினார். அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.
  தீபாவளியின் மையக் கருத்து:                                           வாழ்க்கையில்,இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 
                தீபாவளியைகொண்டாடும்  மதங்கள்:
  இந்து, சீக்கியம், சைனம் மற்றும் பௌத்தம் மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
தீபாவளி கொண்டாடும் முறைகள்:
“விளக்குகளால் அலங்கரித்தல், வெடி வெடித்தல், பரிசு பரிமாறல்  போன்றவை மூலம் தீபாவளியை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.
தீபாவளியை கொண்டாடும் தேசங்ககள்:
                   இந்தியா, நேபாளம்,  இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
            இந்துக்கள் மட்டுமின்றி சீனர்கள், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.
                 “மலேசியா சிங்கையில் வாழும் இந்தியர்களும்”, தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர்