1 Answers
Best Answer
வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா நடைபெறும். ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், ” நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் ” வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீப காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன.
Please login or Register to submit your answer