Home ஆன்மிகம் கிறிஸ்துமஸ் தாத்தா கதை உருவான வரலாறு!

கிறிஸ்துமஸ் தாத்தா கதை உருவான வரலாறு!

2
கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் தாத்தா கதை உருவான வரலாறு! சாண்டா கிளாஸ் ஏன் சிவப்பு நிற ஆடை அணிந்து உள்ளார்? தாமஸ் நாஸ்ட் யார்? santa claus story tamil.

கிறிஸ்துமஸ் வந்துவிட்டது. உலகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகை. கிறிஸ்துமஸ் பற்றிய நிறைய கதைகள் வரும்.

பலரும் பல கதைகளைக் கூறுவார்கள். அதிலும் முக்கியமாக சாண்டாகிளாஸ் (santa claus story tamil) பற்றிய கதை நிறையவே உலா வரும்.

கற்பனைக் கதாப்பாத்திரம்

சாண்டா கிளாஸ் என்ற ஒரு கதாப்பாத்திரம் முழுக்க முழுக்க கற்பனையே. ஆனால், பலர் கிறிஸ்து பிறந்து 200 வருடங்களுக்குப்பின் சாண்டாகிளாஸ் வாழ்ந்ததாக கூறுவார்கள்.

அது உண்மையல்ல. நம்ம ஊர் அம்புலி மாமா கதை போன்றே சாண்டாகிளாஸ் கதையும் ஒரு கற்பனையே.

குழந்தைகளை கிறிஸ்துமஸ் தினத்தில் குதூகலப்படுத்தவே இப்படி ஒரு கதை புனையப்பட்டது.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம் உண்மையா? கிரேட் கன்ஜெக்சன் என்றால் என்ன? இயேசு பிறந்த வரலாறு

சாண்டாகிளாஸ் யார்? (santa claus story tamil)

துருக்கியின் மீரா நகரில் பிறந்த நிக்கோலஸ் என்ற பாதிரியார் ஒருவரும் இந்தக் கதையில் தொடர்பு படுத்தப்பட்டவர்.

வாரி வழங்கும் குணம் படைத்தவர். ஏழைகளுக்கு உதவுவார். பல பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றியுள்ளார். குழந்தைகளுக்கு ரகசியமாக பரிசு தருவார்.

பிற்காலத்தில், நிக்கோலஸ் என்பவரே சாண்டாகிளாஸ் என மாற்றப்பட்டார். இப்படி ஒரு கதை உள்ளது.

நிக்கோலஸ் என்ற கதாப்பாத்திரமே ஒரு கற்பனைதான். வரலாற்று ஆதாரமாக எதுவும் இல்லை. 300 வருடங்களுக்கு முந்தைய காலகட்டத்தில்தான் இப்படி ஒரு பாத்திரமே பலரால் அறியப்பட்டுள்ளது.

அதன்பிறகே, அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. தேவாலயம் எழுப்பப்பட்டுள்ளது.

சாண்டா கிளாஸ் எப்படி பிரபலமானார்?

சிவப்பு தொப்பி, வெண்ணிற தாடி, உப்பிய வயிறு மற்றும் வயதான தோற்றத்துடன் கையில் கோகோகோலா குளிர்பானம். இப்படி ஒரு படத்தை வரைந்தவர் தாமஸ் நாஸ்ட் (Thomas Nast).

தாமஸ் நாஸ்ட் (thomas nast) என்பரே 1931-ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு உருவம் கொடுத்தார். பச்சைநிற கிறிஸ்துமஸ் தாத்தாவை சிவப்பு நிறமாக மாற்றினார்.

வணிகர்கள் சலுகைகள் அள்ளி வீசும் ப்ளாக் ப்ரைடே பற்றி தெரியுமா?

கோகோகோலா கம்பெனியின் விளம்பரத்திற்காக அப்படத்தை வரைந்தார். கோகோகோலாவும் குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி மகிழ்வித்தது.

கோகோகோலா உலகம் முழுவதும் வளரவளர கிறிஸ்துமஸ் தாத்தாவும் உலகம் முழுவதும் வளர்ந்துவிட்டார்.

பின்பு, கிறிஸ்துமஸ் தாத்தா, மான்கள் பூட்டிய வண்டியில் பரிசுப் பொருட்களுடன் வானிலிருந்து பறந்து வருவார் எனக்கூறப்பட்டது.

கிறிஸ்துமஸ் மரம் வரலாறு | கிறிஸ்துமஸ் மரம் உண்மை பெயர் என்ன?

இந்தியாவில், ‘ஜிங்கில் பெல்‘ பாடல் ஒலிக்கவிட்டு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து, வீடுவீடாய் பரிசுப்பொருட்கள் வழங்குவதை வழக்கமாக்கிக் கொண்டனர்.

இதுவே, கிறிஸ்துமஸ் தாத்தாவின் உருவான வரலாறு. எல்லோருக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version