Home தொழில்நுட்பம் ஏர்டெல் நோக்கியா கூட்டணி; 7636 கோடி செலவில் புதிய திட்டம்

ஏர்டெல் நோக்கியா கூட்டணி; 7636 கோடி செலவில் புதிய திட்டம்

0
ஏர்டெல் நோக்கியா

ஏர்டெல் நோக்கியா கூட்டணி; 7636 கோடி செலவில் புதிய திட்டம். ஜியோ-பேஸ்புக் கூட்டணிக்கு போட்டியாக இருக்குமோ? Airtel Nokia made a new agreement with one billion US dollar.

இந்தியா முழுவதும் புதிதாக 3 லட்சம் வானொலி தொலைதொடர்பு கருவிகள் வருகிற 2022க்குள் நிறுவ முடிவு  செய்துள்ளது நோக்கியா நிறுவனம்.

இதன் மூலம் இந்தியாவின் பிரபலமான ஏர்டெல் தொலைதொடர்பு சேவையின் ஆற்றலையும் 5ஜி தொழில்நுட்பத்தை கொண்டு வரவும் இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நோக்கியா நிறுவன சி‌இ‌ஓ ராஜிவ் சூரி கூறியதாவது, இந்தியாவில் எதிர்கால தொழில்நுட்பத்தில் எங்கள் பெயரை நிலைநாட்ட இந்த ஒப்பந்தம் ஒரு தொடக்கமாக அமையலாம்.

130 கோடி மக்கள் தொகையுடன் இருக்கும் இந்தியா உலகத்தில் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு சந்தையாகும். 5 வருடத்தில் 92 கோடி பயனாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version