Home தொழில்நுட்பம் கொரோனா வைரஸ் க்கு புதிய ஆப் : மத்திய அரசு வெளியிட்டுள்ளது

கொரோனா வைரஸ் க்கு புதிய ஆப் : மத்திய அரசு வெளியிட்டுள்ளது

0
CORONA KAVACH

கொரோனா கவச் (corona kavach) என்ற ஆப் மூலம் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.

covid 19 ட்ராக் செய்வதற்காக இந்திய அரசாங்கம் கொரோனா கவச் என்ற புதிய ஆப்பை வெளியிட்டுள்ளது.

இந்த Ministry of Electronics and Information Technology (MeitY) மற்றும் Ministry of Health and Family Welfare (MHFW) இரண்டும் சேர்ந்து உருவாக்கின.

கொரோனா வைரஸை கண்காணிப்பதற்காக இந்திய அரசாங்கம் இப்படி ஒரு ஆப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போது பீட்டா நிலையில் உள்ளது.

இந்த ஆப் பணிகள் மேலும் அப்கிரேடு செய்வதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதன் நோக்கம் என்னவென்றால் கொரோனா வைரஸ் குறித்து மக்களை எச்சரிப்பது இதன் ஒரே நோக்கம் ஆகும். இந்த ஆப் பயனர்களின் தொலைபேசி எண் தரவு மற்றும் இருப்பிடத்தை பயன்படுத்தி நாவல் கொரோனா வைரஸால் தொற்றுநோய் பாதிக்கப்படுகிறதா என்பது அவர்களுக்கு தெரிவிக்கிறது.

கொரோனா கவச் என்றால் என்ன?

இந்த ஆப் விளக்கத்தில் உள்ள தகவலின் படி அதன் நோக்கம் என்னவென்றால் தகவல்களைக் கொடுத்து தகவல்களை எடுத்துக் கொள்வதாகவும். அறிக்கைகளின்படி இந்த பயன்பாடு தற்போது ஆண்ட்ராய்டு பயனர்கள் மட்டுமே கிடைக்கிறது.

இந்த corona kavach ஆப்பை நீங்கள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த ஆப் ஒவ்வொரு மணி நேரமும் பயனர்களின் இருப்பிடத்தை கண்காணித்து அவர் சந்தித்த நபர்களில் யாராவது வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளாரா என்பதை கூறுகிறது.

இது மிகவும் எளிதான வழியில் செயல்படும். இந்த ஆப் ஆறு கேள்விகள் கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் இருக்கிறதா? உங்கள் உடல் வெப்பநிலை என்ன? நீங்கள் வெளிநாட்டிலிருந்து திரும்பி இருக்கிறீர்களா? உங்களுக்கு இதயம் நோய் இருக்கிறதா? உங்களுக்கு சளி மற்றும் தொண்டையில் வலி இருக்கிறதா? சமீபத்தில் வந்த ஒருவரை நீங்கள் சந்தித்தீர்கள்? என்று வெவ்வேறு வகையில் கேள்விகள் கேட்கும்.

எடுத்துக்காட்டாக வெளிநாட்டில் இருந்து திரும்பினார் என்று நீங்கள் கூறினால் இந்த தகவலின் அடிப்படையில் பயன்பாடு உங்களை வெவ்வேறு வகையில் வைக்கிறது.

இது பச்சை ஆரஞ்சு மஞ்சள் மற்றும் சிவப்பு என 4 பிரிவுகளில் வருகிறது.

கவச் பொத்தானை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் கண்காணிப்பை செயல்படுத்தலாம்.

இந்த ஆப் எப்படி பயன்படுத்துவது?

இந்த ஆப்பை நீங்கள் திறக்கும்போது MeitY and MHFW ஆல் உருவாக்கப்பட்டது என்று திரையில் காண்பிக்கிறது.

அதன்பிறகு உங்கள் இருப்பிடம், கண்காணிப்பு அனுமதி போன்ற சில அனுமதிகளை கேட்கிறது. இதற்குப் பிறகு இறுதியாக OTP உங்கள் பதிவு எண்ணுக்கு அனுப்பப்படும். பதிவு செய்த பிறகு பயன்பாட்டில் முகப்பு பக்கத்தை பெறுவீர்கள்.

நாட்டில் இதுவரை எத்தனை பேர் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள் எண்ணிக்கை, இழப்புகள், குணமடைந்த நபர்கள் போன்ற சில தகவல்கள் நீங்கள் பெறுவீர்கள்.

வைரஸால் பாதிக்கப்பட்ட ஏதேனும் நபர்களுடன் நீங்கள் தொடர்பு கொண்டால் அதன் அறிவிப்பை பயன்பாட்டின் மூலம் பெறுவீர்கள்.

இதுவும் இது ஒவ்வொரு மணிநேரமும் உங்களின் LOCATION டிராக் செய்து கொண்டே இருக்கும்.

குறிப்பு :- இந்த app தொடர்ந்து அப்கிரேட் செய்து வருவதால் சில சமயங்களில் play storeல் காண்பிக்கப்படாது. ஒவ்வொரு மாவட்டம் மற்றும் ஊர் வாரியாக location பார்த்து வருகிறது. நம்முடைய location பொருது இந்த app play store ல் வரும். தமிழ்நாட்டில் சில நாட்களில் வரும். எனவே சில பயனர்களுக்கு காண்பிக்கலாம் சில பயனர்களுக்கு காண்பிக்காமலும் இருக்கலாம். காத்திருங்கள்.

வேறு இது சம்பந்தமாக கேள்வி பதில் தளம் தமிழில் சில வலைத்தளங்கள் இருக்கிறது. வினாவிடை மற்றும் கோரா போன்ற தலத்தில் உங்கள் கேள்விகளை கேட்டு பதில்களை பெறலாம்.

மேலும் தகவலுக்கு who வலைத்தளம் பார்வையிடவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version