Home ஆன்மிகம் ஹாசனாம்பா: தீபாவளி தரிசனம் தரும் அம்மன்

ஹாசனாம்பா: தீபாவளி தரிசனம் தரும் அம்மன்

0
ஹசனாம்பா ஹாசன் கோவில் வரலாறு

ஹாசனாம்பா: தீபாவளி தரிசனம் தரும் அம்மன் (ஆடி மாத தரிசனம் 2 தொடர்): கோவில் அதிசய நிகழ்வுகள் கெட்டு போகாத நைவேத்தியம், சந்தன பொட்டு. ஹாசன் கோவில் வரலாறு.

அன்னை பராசக்தியின் மகிமையை இந்த ஆடி மாதம் முழுதும் சிந்திக்க இருக்கிறோம்.

அம்பிகையின் மகிமைகளை கூற வேண்டும் என்றால் இந்த ஒரு பிறவு போதாது. அளவிடற்கரிய அதிசயங்களை புரிந்து வருகிறாள்.

அந்த வகையில் வருடதிற்கு 10 நாட்கள் தீபாவளி சமயத்தில் மட்டுமே தீபாவளி தரிசனம் தரும் அன்னையின் திருத்தலமே ஹாசனாம்பிகா திருக்கோவில்.

ஹாசன் கோவில் வரலாறு

ஹாசனாம்பா கோவில் 12-ஆம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. இந்த ஹாசனாம்பா வந்த பிறகுதான் இந்த ஊர் ஹாசன் என்று பெயர்பெற்றது.

சப்த மாதர்களே இங்கே புற்று வடிவிலும், தீர்த்த கிணறாகவும், கோட்டையாகவும் காட்சி தருவதாக கூறப்படுகிறது.

கருவறையில் மூன்று சுயம்பு வடிவமாக அம்பிகை காட்சி தருகிறாள். கர்நாடக சிற்ப கலையை பறைசாற்றும் அற்புதமான வேலைபாடுகள் நிறைந்த கோவில்.

ஹசனாம்பா கோவில் அதிசய நிகழ்வுகள்

ஹசனாம்பா கோவில் வருடத்திற்கு 10 நாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனதிற்கு அனுமதி அளிக்கப்படும்.

அம்பிகையின் நெற்றியில் இயற்கையாகவே பெரிய சந்தன பொட்டு உருவாகிறது. இந்த ஆண்டு அது எடுக்கப்பட்டு பிரசாதமாக தரப்பட்டும்.

பிறகு அடுத்த ஆண்டு நடைதிறக்கும் போது அதே போல பெரிய சந்தன பொட்டு நெற்றியில் இருக்கும். இது யாரும் வைப்பது இல்லை தானாக தோன்றும் அதிசயம் ஆகும்.

பத்து நாட்கள் முடிந்த பின் நடைசாற்றப்படும். அப்போது கருவறை விளக்குகளில் நெய் ஊற்றி விளக்கு எரியும். நைவேத்தியத்திற்காக அன்னமும், பதார்தங்களும் வைக்கப்படும். ஒரு சொம்பில் தீர்த்தமும், மலர் மாலைகளும் சாற்றப்பட்டு அலங்காரத்தோடு கருவறை மூடப்படும்.

அடுத்த ஆண்டு நடைதிறக்கும் போது விளக்குகள் அணையாமல் எரிந்து கொண்டே இருக்கும். சொம்பில் இருந்த நீர் குறையாமல் இருக்கும்.

மலர் மாலைகள் அன்று சாற்றியது போல புதிதாகவும் அதே மணத்தோடும் இருக்கும். வைக்கப்பட்ட நைவேத்தியங்கள் கெட்டுப் போகமால், வைத்த நாளில் இருந்த அதே சூடோடு இருக்கும். இன்றளவும் நடந்து வரும் அதிசய நிகழ்வுகள் ஆகும்.

ஹாசனாம்பா நடைதிறப்பு

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு 10 நாட்களுக்கு முன் நடைதிறக்கப்படும். இராஜ குடும்பத்தை சேர்ந்த வம்சாவளிகள் கோவில் முன் ஒரு வாழைமரத்தை வெட்டிய பின்பே நடை திறக்கப்படும்.

அரச குடும்பத்தின் பூஜையை ஏற்ற பின்பே பக்தர்களுக்கு காட்சி தருவாள். 24 மணி நேரமும் தரிசனம் செய்ய அனுமதி உண்டு.

பக்தர்களின் குறைகளை உடனேயே தீர்க்கும் மகா சக்தியாக ஹாசனாம்பா குடிக்கொண்டிருக்கிறாள். வேண்டிய வரங்களை வாரி வழங்கும் அன்னையாக ஹாசன் நகரில் கோவில் கொண்டுள்ளார்.

அனைவரும் நம் ஆயுளில் ஒருமுறை சென்று தரிசித்து அன்னையின் அற்புதத்தை கண்டும் அவளின் அருளினை பெற்றும் வருவோமாக.

ஹாசனாம்பா கோயில் அமைவிடம்

ஹாசனாம்பா கோயில் ஹாசன் நகர மையத்திலேயே அமைந்திருக்கிறது. அதோடு பெங்களூரிலிருந்து 184 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஹாசன் நகரத்துக்கு பெங்களூரிலிருந்து எண்ணற்ற அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரயில் வசதியும் உண்டு.

பெங்களூர்-ஹாசன் பேருந்து அட்டவணை : 21:35, 21:59, 21:00, 11:05, 21:15, 14:05, 22:30, 23:00, 23:15, 21:15, 21:35, 21:06, 22:00, 05:00, 07:45, 06:30.

ஹாசன்-பெங்களூர் பேருந்து அட்டவணை : 11:00, 20:30, 14:00, 22:01, 21:05, 22:29, 22:50, 22:45, 19:30, 07:00, 06:01, 06:31, 13:30, 10:30, 11:30.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version