Home சிறப்பு கட்டுரை கில்லட்டின் (Guillotine) கருவி பற்றி தெரியுமா?

கில்லட்டின் (Guillotine) கருவி பற்றி தெரியுமா?

0
கில்லட்டின் (Guillotine) கருவி பற்றி தெரியுமா?

கில்லட்டின் (Guillotine) கருவியால் முதல் மனிதன் நிக்கோலஸ் ஜாக்வெஸ் பெலடியர் (Nicolas Jaques Pelletier) கொல்லப்பட்ட நாள் இன்று.

கில்லட்டின் – ஒரு மரணதண்டனை கருவி

இடைக்கால ஐரோப்பாவின் பல நாடுகளில்  குற்றவாளிகளை தண்டிக்க கட்டி வைத்து  உயிருடன் எரித்துக் கொல்வது, கொதிக்கும் எண்ணெயில் மூழ்கடித்து கொலை செய்வது போன்ற கொடுமையான தண்டனைகள் பயன்படுத்த சிறு தவறு செய்தவர்கள் கூட பயங்கரமாக தண்டிக்கப்பட்டனர்.

அதுபோன்ற தண்டனைகளில் ஒன்றுதான் கில்லட்டின் என்னும் மரணதண்டனை. கில்லட்டின் என்பது குற்றவாளிகளின் தலையை வெட்டிக் கொல்லும் இயந்திரமாகும்.

ஜோசப் இக்னேஸ் கில்லட்டின்

இந்த கருவி, பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயியின் (Louis XVI) தலையை வெட்டி பிரெஞ்சு அரசை முடிவுக்கு கொண்டு வந்த ஜோசப் இக்னேஸ் கில்லட்டின் (Joseph Igance Guillotine) என்ற மருத்துவரால் பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.

பிரிட்டனில் ஏற்கெனவே இதுபோன்ற தலை வெட்டும் கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கரவாதிகளை தண்டிக்கவே இக்கருவி பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது

கில்லட்டின் கருவியின் பலகையில் குற்றவாளியின் தலையைக் கட்டி வைக்கப்பட்டு, ஒரு கூர்மையான கத்தியால் அவரது தலை துண்டிக்கப்படும். இது “National Razor Of France (பிரான்சின் தேசிய சவரக்கத்தி)” என்று அழைக்கப்பட்டது.

1790களில் கில்லட்டின் கருவியானது குழந்தைகளின் விளையாட்டுப் பொருளாகவும் இருந்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது அதிகமாக பயன்படுத்தப் பட்ட கில்லட்டினை கண்டுபிடித்தவர்கள் பிரெஞ்சுக்காரர்கள் அல்ல, அதனை கண்டுபிடித்தவர் டோபியஸ் ஷ்மிட் என்ற ஒரு ஜெர்மானியர்.

ஹிட்லர் நிறுவிய கில்லட்டின்

பிரான்சை போலவே ஜெர்மனியிலும் கில்லட்டின் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. 1930-ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனி முழுவதிலும் இருபது கில்லட்டின் கருவிகளை நிறுவினார்.

ஹிட்லரின் நாஜி ஜெர்மனியில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கில்லட்டினால் கொல்லப்பட்டனர். இடைக்கால ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த கில்லட்டின் பிரான்சில் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

கில்லட்டினால் மாண்டவர்கள்

பதினாறாம் லூயி மன்னர், அரசி மேரி அண்ட்டோனட், வேதியியலாளர் அண்டோன் லவாய்ஸியர் போன்ற பல்லாயிரக் கணக்கான மனிதர்களைக் கில்லட்டினால் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

கில்லட்டினால் கொல்லப்பட்ட கடைசி மனிதர் ஹமீதா ஜன்தோபி ஆவார். இவர் கொல்லப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து 1981-ஆம் ஆண்டு கில்லட்டின் மரணதண்டனைக்கு மாநில அரசு தடைவிதிக்கப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version