Home அறிவியல் சூப்பர் வோர்ம் மூன் (Super Worm Moon) வரப்போகிறது பார்க்க ரெடியா?

சூப்பர் வோர்ம் மூன் (Super Worm Moon) வரப்போகிறது பார்க்க ரெடியா?

0
சூப்பர் வோர்ம் மூண் (Super Worm Moon)
சூப்பர் வோர்ம் மூண் (Super Worm Moon)

சூப்பர் வோர்ம் மூண் (Super Worm Moon) வரப்போகிறது பார்க்க ரெடியா? சூப்பர் வோர்ம் மூண் என பெயர் எப்படி வந்தது? சூப்பர் வோர்ம் மூன் எப்பொழுது தெரியும்.

சூப்பர் வோர்ம் மூன் மார்ச் 9-ஆம் தேதி ஆரம்பித்து புதன் கிழமை வரை தெரியும். இந்த வருடத்தின் இரண்டாவது சூப்பர் மூன் இதுவாகும். ஏற்கனவே பிப்ரவரி 9-ஆம் தேதி முதல் சூப்பர் மூன் வந்து போனது.

இன்று இரவு வரும் சூப்பர் வோர்ம் மூன் மாலை 6.30 மணியில் இருந்து தெரிய ஆரம்பிக்கிறது. பிற நாட்களில் தெரியும் நிலாவை விட சற்று பெரிதாகவும் வெளிச்சமாகவும் தெரியும்.

நிலா பூமியை மற்ற கோள்களைப் போல் நீள்வட்டத்தில் சுற்றி வருவதால் பூமியும் நிலவும் மிக அருகில் வந்தால் பெரியதாக வெளிச்ச்மாக தெரியும் அதுவே சூப்பர் வோர்ம் மூண்.

1979-ஆம் ஆண்டில் முதன் முதலில் இதற்கு சூப்பர் மூன் என பெயரிடப்பட்டது. அதன் பிறகு நாள் செல்ல இது பிரபலமானது.

சூப்பர் வோர்ம் மூண் என பெயர் எப்படி வந்தது?

மார்ச் மாதத்தில் அதாவது வசந்தா காலங்களில் மண் புழுக்கள் அதிகம் உற்பத்தி ஆகிற காலங்கள் இதனால் பறவைகளுக்கும் விவசாய உற்பத்திக்கும் நல்வழி வகுக்கும். இது வோர்ம் மூண் என அழைக்க காரணம்.

மேலும் இந்த வரும் ஸ்பிரிங் ஈக்குவனிக்ஸ் மார்ச் 19ஆம் தேதி வருகிறது. கடந்த 100 வருடங்களுடன் ஒப்பிடுகையில் மிக சீக்கிரமாக வரப்போகிறது.

சூப்பர் ப்ளட் வோல்ஃப் மூன்: சந்திர கிரகணம்

இந்த சூப்பர் மூனை நாடு மக்களின்  காலாச்சாரத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்.

அவை பின்வருமாறு க்ரோ மூன், கிரஸ்ட் மூன், ஷாப் மூன், சுகர் மூன், லேண்டான் மூன் (the crow moon, the crust moon, the sap moon, the sugar moon and the Lenten moon).

சூப்பர் வோர்ம் மூன் எப்பொழுது தெரியும்

மார்ச் 9-ல் ஆரம்பித்து மூன்று நாட்களுக்கு தெரியும். திங்கட்கிழமை இரவு மிகவும் வெளிச்சமாகவும் பெரிதாகவும் தெரியும்.

அடுத்த சூப்பர் மூண் ஏப்ரல் 8-ஆம் தேதி 2020 இல் வரும் இதற்கு சூப்பர் பிங்க் மூன் என பெயர் இடப்பட்டு உள்ளது.

பொதுவாக வருடத்திற்கு மாதத்திற்கு ஒன்று என 12 பவுர்ணமி வரும் இந்த வருடம் அக்டோபர் மாதம் இரண்டு பவுர்ணமி 1-ஆம் மற்றும் 31ஆம் தேதிகளில் வருகிறது. இதற்கு புளு மூண் என பெயர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version