ஐரோப்பாவின் பெரும் பகுதிகளை வென்று தனது ஆட்சியை நிறுவிய மாவீரன் நெப்போலியன் போனபார்ட் மன்னரின் வாரிசு அல்ல. மாறாக ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த 13 பிள்ளைகளில் ஒருவர்.
நெப்போலியனின் இளமைப்பருவம்
பிரான்சின் முதலாம் நெப்போலியன் என்று அழைக்கப்படும் நெப்போலியன் போனபார்ட் ஆயிரத்து 1769-ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள கார்சிகோ தீவில் பிறந்தார்.
கார்லோ போனபார்ட் மற்றும் லெட்டீஸியா ரொமலினோ போனபார்ட் தம்பதிக்கு பிறந்த 13 குழந்தைகளில் ஒருவர் தான் இந்த நெப்போலியன்.
இவர்கள் கார்சிகோவின் உயர் வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.
கல்வி மற்றும் இளமைப்பருவம்
சிறுவயது முதலே தனிமை விரும்பியாக இருந்த நெப்போலியனுக்கு மிகவும் பிடித்த பாடம் வரலாறு. பள்ளிப் படிப்பிற்கு பின் பிரெஞ்சு ராணுவ அகாடமியில் சேர்ந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டார்.
சில நாட்களிலேயே தனது போர் திறமையால் பிரெஞ்சுப் படையின் படைத்தளபதியாக உயர்வு பெற்றார்.
பிரான்சின் மன்னன்
எதிரி நாடான ஆஸ்திரியாவின் படைகளை இத்தாலியில் முறியடித்த பின்னர், நெப்போலியனின் புகழ் நாடெங்கிலும் பரவத்தொடங்கியது.
பிரெஞ்சுப் புரட்சியின் மூலம் மன்னர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் நெப்போலியன் தேசிய நாயகனாக கொண்டாடப்பட்டார்.
1804 ஆம் ஆண்டு பிரான்சில் உள்ள நோட்ரே டோம் (Cathedral of Notre Dome) திருச்சபையில் தன்னை பிரான்ஸின் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.
நெப்போலியனின் ஆட்சி
1802 ஆம் ஆண்டு முதல் 1815-ஆம் ஆண்டு வரை முதலாம் நெப்போலியனின் தலைமையில் பிரெஞ்சு தேசம் ஐரோப்பிய நாடுகளுடன் பல போர்களை தொடுத்தது.
இது வரலாற்றில் நெப்போலியன் போர்கள் (Napoleanic Wars) என அறியப்படுகிறது. போருக்கு நிதி திரட்டுவதற்காக பிரான்சின் லூசியானா பகுதியை அமெரிக்காவிடம் 15 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டது.
போர்களும் சாதனைகளும்
1805-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்ர்லிட்ஸ் போரில் (The battle of Austerlitz) நெப்போலியனின் படை ப்ரஷ்யாவையும் ஆஸ்திரியாவையும் வீழ்த்தியது.
இதுவே ரோமப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. புரட்சியினால் அமைதி இழந்த பிரான்சில் நெப்போலியன் மன்னரான பிறகுதான் அமைதி நிலவியது.
பிரெஞ்சு உயர் வர்க்கத்தினரின் அதிகாரத் திமிரை ஒழித்து சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றார் நெப்போலியன்.
அரசியல் சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை (Code Of Napolean) கொண்டு வந்தார். பிரான்சின் வங்கியை (Banque De France) நிறுவியவர் இவரே.
வட இத்தாலி, தென் இத்தாலி, போலந்து ப்ரஷ்யா, டென்மார்க், ஜெர்மனியின் சில பகுதிகள், ஸ்பெயின் போன்ற பல நாடுகளை கைப்பற்றி தனது ஆட்சியை விரிவுபடுத்தினார் நெப்போலியன்.
நெப்போலியன் இறப்பு
1815-ஆம் ஆண்டு நடைபெற்ற வாட்டர்லூ போரில் (Battle of Waterloo) நெப்போலியன் படை தோல்வியுற்றது. மாவீரன் நெப்போலியன் நாடு கடத்தப்பட்டு பிரிட்டனுக்கு சொந்தமான ஹெலினா தீவில் (Island of Helena) அடைத்து வைக்கப்பட்டார்.
ஆறு வருடங்களுக்கு பிறகு நெப்போலியன் எனும் மாவீரனின் வீர சகாப்தம் முடிவுற்றது. உலகின் பல பகுதிகளை வென்ற அலெக்சாண்டர் கிரேக்க நாட்டுக்கு மாவீரன் என்றால், பிரான்சுக்கு நெப்போலியன் போனபார்ட்!