Home வரலாறு லண்டன் கோபுரம் – The Tower Of London

லண்டன் கோபுரம் – The Tower Of London

448
0

உலகிலேயே மிகப் பழமையான மற்றும் புகழ்மிக்க கோபுரங்களில் லண்டன் கோபுரமும் (The Tower Of London) ஒன்று. 900 ஆண்டுகள் பழமையான இக்கோபுரம் லண்டனின் புகழ்பெற்ற நதியான தேம்ஸ் நதிக்கு (River Thames) அருகில் அமைந்துள்ளது.

எப்போது யாரால் கட்டப்பட்டது?

வில்லியம் தி கான்க்வெரர் (William The Conqueror) பதினோராம் நூற்றாண்டில் லண்டனை கைப்பற்றிய பின் 1066 ஆம் ஆண்டு லண்டன் கோபுரத்தை கட்ட தொடங்கினார்.

வரலாற்று ஆய்வாளர் ஜாஃப்ரி பர்ணல் (Geoffrey Parnell) தனது “The Tower Of London: Past & Present” (லண்டன் கோபுரம்-அன்றும் இன்றும்) என்னும் புத்தகத்தில் லண்டன் கோபுரம் வில்லியம் மரணத்திற்குப்பின் இருநூற்று ஐம்பது ஆண்டுகளாக விரிவுபடுத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது அக்கோபுரம் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இருப்பதாகவும் எழுதியிருக்கிறார்.

“உயர் வர்க்கத்தினரின் சிறைக்கூடம்”

தான் தங்குவதற்காக வில்லியம் கட்டிய இந்த கோபுரம் பல நூற்றாண்டுகளாக இங்கிலாந்து ஆட்சியாளர்களால் சிறைச்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

குற்றம்சாட்டப்பட்ட அரசர்கள், அரசிகள் மற்றும் உயர்குடி வர்க்கத்தினர் இக்கோபுரத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

மன்னர் நான்காம் எட்வர்டின் (Edward IV) மகன்களான எட்வர்ட் மற்றும் ரிச்சர்ட், எட்டாம் ஹென்றியின் (Henry VIII) மனைவிகளான ஆன்னி போலின் (Anne Boleyn) மற்றும் கேத்தரின் ஹாவர்ட் (Katherine Howard) இங்கு சிறை அடைக்கப்பட்டு பின்னர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

“இங்கிலாந்தின் கிரீடமும் மறபொக்கிஷங்களும்”

1303-ஆம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள செயின்ட் பீட்டர் மடத்திலிருந்து (St. Peter’s Abbey) ஏராளமான விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர், எஞ்சி இருந்த பொக்கிஷங்கள் பாதுகாப்பிற்காக லண்டன் கோபுரத்திற்கு கொண்டுவரப்பட்டன.

இங்குதான் பிரிட்டன் மன்னர்கள் மற்றும் அரசிகள் தங்களது முடிசூட்டு விழாவில் அணியும் கிரீடமும் (State Diadem) வைக்கப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க லண்டன் கோபுரத்தை பார்வையிட ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல பகுதிகளில் இருந்தும் 2 மில்லியனுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தொள்ளாயிரம் ஆண்டுகளாக போர், எதிரிகளின் படையெடுப்பு மற்றும் பீரங்கியால் பாதிக்கப்படாத லண்டன் கோபுரத்தின் அழகு, தற்போது லண்டன் நகரின் வாகனங்களிலிருந்து வரும் புகையால் சிதைக்கப்பட்டு வருகிறது.

Previous articleகொரோனா மனிதர்களால் உருவாக்கப்படவில்லை அமெரிக்கா
Next articleஉழைப்பால் உயர்ந்த விஜய்யை Vijay The Face Of Kollywood கொண்டாடும் ரசிகர்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here